எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஓசனிக் வைக்கிங் இலங்கையரை இறக்கிவிட்ட பின் ஆஸி. திரும்புகிறது

Oceanic_Viking_Refugeesஅவுஸ் திரேலியாவின் சுங்கப்பிரிவுக் கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து 36 பேர் 5 படகுகளில் நேற்று புதன்கிழமை காலை ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தோனேசியாவின் பின்ரன் தீவிலுள்ள தஞ்ஜுன் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்படவிருப்பதாக ஏ.ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

இதற்கு முன்னர் இந்தோனேசியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான டாக்டர் சுஜாத்மைக்கோ தலைமையிலான அதிகாரிகள் குழு கப்பலுக்கு சென்று புகலிடம் கோருவோர் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டது. கப்பலிலிருந்த இலங்கையரின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆலோசனைகள் என்பன பரிசீலிக்கப்பட்டன. கப்பலிலிருந்து புகலிடம் கோருவோர் யாவரும் இறங்கிச் சென்றவுடன் ஓசனிக் வைக்கிங் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்லவுள்ளது.

அகதிகளென்பது நிரூபிக்கப்பட்டால் சில மாதங்களில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழியை புகலிடம் கோரும் இலங்கையர் இப்போது ஏற்றுக்கொண்டதையடுத்து இந்தோனேசியாவின் தடுப்பு நிலையத்துக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முப்படை வீரர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

முப்படை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கடமையாற்றும் படை வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த 80 ரூபா முதல் 100 ரூபா வரையிலான நாளாந்த விசேட கொடுப்பனவுத் தொகை ஏனைய படைவீரர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை முப்படை அதிகாரிகள் அனைவருக்கும் மாதந்தம் 1000 ரூபா விசேட மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. மேலும் அரச சேவையிலுள்ள அனைவருக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்னவாக ஒரு மாதத்துக்கு 750 ரூபாவையும் ஓய்வுபெற்றவர்களுக்கு 375 ரூபாவையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற் கூறப்பட்ட கொடுப்பனவுகள் 2009 நவம்பர் முதல் அமுலுக்கு வருவதுடன் 2010 ஜனவரி முதல் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோன் ஹோம்ஸ் வவுனியா சென்று திரும்பியுள்ளார்

johnholmesvavuniya.jpgஐ.நா.  மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். இதன் போது அவர் மீள்குடியேற்றம் தொடர்பாக தமது திருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று விசேட விமானம் மூலம் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

கதிர்காமர், அருணாசலம், ஆனந்த குமாரசாமி ஆகிய நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவரை, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கொழும்பு திரும்பிய அவர் மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையை சந்தித்து உரையாடினார். இன்றைய தினம் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

கொழும்பு, கண்டி, களுத்துறை பகுதியில் இடியுடன் கடும் மழை, வெள்ளம்; இயல்பு நிலை பாதிப்பு

colombo-town-hall.jpgநாட்டின் சில பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு, களுத்துறை, கண்டி மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் ரயில், பஸ் போக்குவரத்துக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நாட்டின் பல் வேறு பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்து வரும் போதிலும் நேற்று முன்தினம் (17) இரவு முதல் காலை வரை திடீரென தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியதுடன் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். சில வீதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் நிறைந்திருக்கிறது.

நேற்றுக் காலை கொழும்பு உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.  சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டது. புறக்கோட்டை, தெஹிவளை, மருதானை, மாளிகாவத்தை, புளுமெண்டல் வீதி, மஹரகம, கிரேண்ட்பாஸ், ரத்மலானை, நுகேகொட, பெபிலியான, பொரலஸ்கமுவ, வெஹரஹர, கடுவெல, மீதொடமுல்ல, கொலன்னாவை, காசல் வீதி, குணசிங்கபுர உட்பட பல பகுதிகளில் 600க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதோடு பல வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில தெரிவித்தார்.

பல பிரதான வீதிகளில் நீர் நிரம்பியிருந்ததால் வாகன நெரிசல் காணப்பட்டது. குண சிங்கபுர பஸ் தரப்பிடம் புளுமெண்டல் உப மின் நிலையம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. கொழும்பு 13, 14, 15 பகுதிகளில் காலை வேளையில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள நீர் மாளிகாவத்தை ஆஸ்பத்திரி பகுதியில் புகுந்ததால் ஆஸ்பத்திரி பணிகள் தடைப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் பல நீரில் மூழ்கியுள்ளன.பாணந்துறை, பேருவளை, பயாகலை, மதுகம, களுத்துறை, வஸ்கடுவ, பொது பிடிய, வாத்துவை, பின்வத்த போன்ற பகுதிகளில் தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 1200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தொடர் மழையினால் தோட்டங்களில் பால் சேகரிப்பு, சீவல், கடற்றொழில், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டன. அக்குறணை பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பிங்காஓயா பெருக்கெடுத்ததால் இப்பகுதியில் வெள் ளம் ஏற்பட்டது. மஹய்யாவ பகுதியில் ஏற்பட்ட மண் சரவில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கம்பொல – கண்டி ரயில் வீதியில் பொல்கும்புர எனும் பகுதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன் ஒருவர் காயமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஜின் கங்கை, மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாழமுக்கம் நகர்ந்தது

நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையம் கூறியது.  இந்த தாழமுக்கம் இலங்கையை விட்டும் நகர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால்ஆகக் கூடுதலாக இரத்மலானை யில் 210.0 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பில் 207.0 மி.மீ. மழை வீழ்ச்சியும் கண்டியில் 93,0 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

எதிர்வரும் தினங்களில் மாலை வேளையிலும் இரவு வேளையிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் கூறியது. 4 வருடங்களின் பின்னரே கொழும்பில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

colombo-town-hall.jpgகொழும்பில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு மாநகர சபை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நடிகை மாலினிக்கு பெருவரவேற்பு

malini.jpgஇத்தாலியின் லெவன்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கு கிடைத்த விருதுடன் நடிகை மாலினி பொன்சேகா நேற்று இலங்கை வந்துசேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக சக நடிக, நடிகையர் பலரும் திரையுலக பிரமுகர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதான கேயின் ‘ஆகாசகுசும்’ (ஆகாயப் பூக்கள்) திரைப்படத்தில் நடித்தமைக் காகவே மாலினி பொன்சேகா வுக்கு இந்த விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் இதே படத்துக்காக சிறந்த நடிகை விருதை மாலினி பெறுவது இது இரண்டாவது தடவையாகும்.

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்

திருகோணமலையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தமிழ்ப்பிரிவு அலுவலகம் திறப்பு விழா

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை அலுவலகம் நாளை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட உள்ளது

செல்வநாகபுரம் பிள்ளையார் வீதியில் அமையவுள்ள சுதந்திரக்கட்சியின் தமிழ்ப்பிரிவு அலுவலகம் நாளை 19ம்திகதி மாலை 3.30 தணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும். கட்சி காரியாலயம் தேசநிர்மான அமைச்சரும் திருமலை சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமாகிய திரு புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண அமைச்சர் திரு நவரத்தினராசா உட்பட வேறு முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த காரியாலயத்தை முன்னாள் சிறீரெலோ உறுப்பினர்களான சிவம் மற்றும் அவரது தோழர்களால் நிர்வகிக்கப்படும். சுதந்திரக்கட்சியின் திருகோணமலை தமிழ்ப்பிரிவு அமைப்பாளராக திரு கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன் (சிவம்)செயற்படவுள்ளார். நாளை முதல் திருகோணமலைப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சமூகப்பிரச்சினைகள் கடந்த 30 வருடங்களாக கவனிக்கப்படாத மற்றும் உருவான பிரச்சிகைளுக்கும் இந்த காரியலயத்தில் பொறுப்பு எடுக்கப்பட்டு அதற்கான உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைப்பாளரான சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் நாளை சைவ முறைப்படி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை சுவிஸ்ல் நடைபெவுள்ள மாநாட்டில் சிறிரெலோவின் சார்பாக லண்டனில் இருந்து சிலர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அடைமழை – நாடெங்கும் வெள்ளம்.

021009monsoon-rains.jpgநேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையைப் போன்றே கொழும்பில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாகவும், ரத்மலானையில் 210 மிமீ., கொழும்பு மாநகரப் பகுதியில் 207மிமீ., கண்டியில் 93 மிமீ. மழை பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் கொழும்பு பயணத்துக்கு இன்று முதல் அனுமதி தேவையில்லை! வடமாகாண ஆளுநர்

chandrasiri_governer.jpgயாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தேவையில்லை எனவும்  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென,  வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அதன்படி இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கிளியரன்ஸ் நடைமுறை புதன் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்ப செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் கனரக வாகனங்கள்; நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்” என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பிறந்த நளையும்  ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடப் பூர்த்தியையும் முன்னிட்டு யாழ் பிரதேச மக்களுக்கு வழங்கும் பரிசாக  இந்தத் தடையை நீக்க அனுமதித்துள்ளார் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை அணி முன்னிலையில் – மஹேல இரட்டை சதம்

mahela-jayawardene.jpgஇலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஸ்கோர் விபரம் வருமாறு

Sri Lanka in India Test series – 1st Test
India 426
Sri Lanka 591/5 (160.0 ov)
Stumps – Day 3

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
TM Dilshan  c Dravid b Khan  112 
 NT Paranavitana  c †Dhoni b Sharma  35 
 KC Sangakkara*  c Tendulkar b Khan  31 
 DPMD Jayawardene  not out  204 
 TT Samaraweera  c Yuvraj Singh b Sharma  70 
 AD Mathews  c Gambhir b Harbhajan Singh  17 
 HAPW Jayawardene†  not out  84  
 Extras (b 5, lb 13, w 3, nb 17) 38     
      
Total (5 wickets; 160 overs) 591 (3.69 runs per over)
To bat KTGD Prasad, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov) 
        
 Bowling
 Z Khan 30 4 93 2 
 I Sharma 28 0 108 2
Harbhajan Singh 39 3 151 1
 A Mishra 43 6 152 0 3. 
 Yuvraj Singh 13 1 49 0 
 SR Tendulkar 7 0 20 0