எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

”போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது” யாழ்ப்பாணத்தில் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vயாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டொவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். வடபகுதி மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென இவ்விரு அமைச்சர்களும் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 17 2010) யாழ். செயலகத்தில் ஊடகவியலர்களிடம் கருத்தத் தெரிவித்த பிரதி அமைச்சர் முரளிதரன் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போத யாழ்ப்பாணம் அபிவிருத்தியடைந்திருப்பதகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் எனவும், தடுப்பு முகாம்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கி சுமார் 200 யுவதிகளுக்கு முதற்கட்டமாக கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், மகிந்த அரசோ, அதன் அமைச்சர்களோ இனவாதமற்றவர்கள் எனவும், இந்த அரசின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான சகல பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒஸ்மானியா கல்லூரியில்  அம்மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் வீடுகள் கட்டங்களின் இடிபாடுகளை தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் அம்மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்து முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார். வடபகுதி முஸ்லிம் மக்களுக்கான உதவிகள் யாவும் அபிவிருத்தியடைந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”வன்னி மக்களுக்கு வீடமைக்கும் உதவி நேரடியாக வழங்கப்படும்” ப சிதம்பரம் – ”அது இலங்கையின் இறமையைப் பாதிக்கும் ஹெகலிய ரம்புக்வல”

Chidambaram_PKeheliya_Rambukwellaபோரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்ற இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த வேளையில், அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் விடுகளை அமைத்துக் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது. இதன்பின் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வுதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். 0

எனினும், இதனை சிறிலங்கா அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது மறுத்துள்ளார். இந்தியாவோ வேறெந்த நாடுகளோ அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவிகளை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உதவிகளைக் கோரியுள்ளோம். அவர்களது உதவிகள் அரசாங்கத்தினுடாகவே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் நாடுகடந்த திட்டத்தை முறியடிக்க சர்வதேசத்தை அணிதிரட்டி உதவ வேண்டும் – பிரதமர் ஜயரட்ன அகாஸியிடம் வேண்டுகோள்

akasi-dm.jpgஇலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்தை உருவாக்க திட்டம் தீட்டியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நாடுகள் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்தவொரு அரசுக்கும் எதிராக இலங்கையில் இருந்து செயற்பட நாம் எந்தவொரு குழுவுக்கும் இடளிக்கவில்லை. அதேபோல் இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாட்டிலும் திட்டம் தீட்டப்படுமாயின் அதனை முறியடிப்பது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் பிரதமர் கூறினார்.

புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளிலும் இந்த நிழல் அரசை உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளதாக தெரிய வந்துள்ளது. அடிப்படிப் பார்ர்க்கும்போது அவ்வாறான நாடுகள் இலங்கைக்கு எதிராக வஞ்சக நோக்குடன் செயற்படுகின்றனவா என்று தனக்கு சந்தேகம் எழுவதாகவும் பிரதமர் அகாஷியிடம் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தெற்கைப் போலவே வடக்கிலும் துரித அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கு அரசாங்கம் சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத் தியுள்ளது. அவை தொடர்பாக அனைத்து இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையும் நட்புறவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்று பிரதமர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் புலிகளின் நிழல் அரசொன்று உருவாகுவதற்கான ஏதாவது பின்னணிகள் இருக்குமாயின் அதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக ஜப்பான் மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது என பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி தெரிவித்தார்.

தனியார் துறையினருக்கும் இன்று விடுமுறை வழங்கக் கோரிக்கை!

gamini_lokuge.jpgஇலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக இன்று பொது மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதால் தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்ததிறன் மேம்பாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது..

அனைத்து அரச கூட்டுத்தாபனங்கள், நிதியச் சபைகள், மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் கடமைபுரியூம் சகல ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்

ஷெல் காஸ் நிறுவன 51வீத பங்குகளை அரசு கொள்வனவு

minis-kahali.jpgஷெல் காஸ் நிறுவனம் அதன் விநியோகங்களை இலங்கையிலும் ஆசியாவிலும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.  இதனையடுத்து ஷெல் காஸ் லங்கா நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் வர்த்தகக் கூட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இலங்கையில் எரிவாயு விநியோகத்திலிருந்து விலகி நிற்கப் போவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை ஆராய்ந்து தீர்மானித்ததற் கமைய இலங்கை வங்கியை நிதி ஆலோசகராகவும் மேலும் ஐந்து அமைச்சுகளின் செயலாளர் களையும் கொண்ட குழு வொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள த்தில் நேற்று (17) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச ஷெல் பெற்றோலியக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஆலோசகராக இலங்கை வங்கி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தைக் குழுவில் மின்சக்தி எரிசக்தி, பெற்றோலிய வளம், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஐந்து அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஷெல் காஸ் நிறுவனம் விலை அதிகரிப்புக்காக பல தடவை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும் நுகர்வோர் அதிகார சபையின் விலைச் சூத்திரத்திற்கு அமைய விலை நிர்ணயம் செய்தது. ஆனால், இதனையும் மீறி விலை அதிகரிப்பு மேற்கொண்ட போது உச்ச நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதில்லை என்ற கொள்கையை ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதேநேரம், தனியார் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களை மீளப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அதன் ஓர் அங்கமாகவே ஷெல் காஸ் நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையும் அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய வெற்றிவிழா கொண்டாட்டம்; இன்று கொழும்பில் கோலாகலம்

victory-parade.jpgவிடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின்   ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முதற்தடவையாக முப்படைகள் மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்குகொள்ளவுள்ளதுடன் அணி வகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினர் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர். பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியை பாராட்டும் வகையிலும் அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படைகளின் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.வழக்கமான அணி வகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்துகொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்குகொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல்முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காண்பிக்கவுள்ளனர்.

யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை – பங்களாதேஷ் இன்று மோதல்

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கை அணி முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. 10 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புள்ள நகரில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில்  இங்கு மின்னொளியின் கீழ் (போதிய வெளிச்சமில்லை என்று புகார் எழுந்துள்ளது)  துடுப்பெடுத்தாடுவது 200 சதவீதம் கடினம் என்றும் டோனி தெரிவித்தார்.

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

ajith.jpgஇவ் வருடம் ஜூலை 1ம் திகதி முதல் மீண்டும் 6 வருடங்களுக்கு அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் கடைமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மீனவர் பிரச்சினைகளை தீர்க்க விசேட செயலணி

தென்பகுதி மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி வழங்காதிருக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடபிராந்தியத்தில் மீன்பிடித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் வடக்கு, கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட செயலணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட மீன்பிடி திணைக்களம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன;

யுத்த சூழ்நிலைக்கு முன்னர் 2/3 பங்கு மீன்கள் வடபகுதியில் இருந்தே பிடிப் பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருகிறது. வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள், படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. வட பகுதி மீனவர்களுக்குத் தேவையான வசதிகள், உதவிகள் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு தொன் எடையில் பிரமாண்ட திருக்குறள்! செம்மொழி மாநாட்டுக்கு உலக சாதனை

mmm.jpgஎட்டு அடி உயரம், ஐந்து அடி அகலத்தில் ஒரு தொன் எடையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திருக்குறள் புத்தகம், வி.ஜி.பி. சார்பில் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படுகிறதென்று வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் கூறினார். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி பிரமாண்டமான திருக்குறள் புத்தகத்தை தயாரித்து உள்ளோம்.

8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 138 பக்கங்களுடன் கூடிய திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்கள் 1330 திருக்குறள் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு தொன் எடை கொண்டது.

ரூ. 5 இலட்சம் செலவில் 40 பணியாளர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பாடுபட்டு புத்தகத்தை தயாரித்து உள்ளனர். இது உலகில் புதிய சாதனையாகும். கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இந்த திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

மாநாட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சி அரங்கத்திலும் இது இடம்பெறும். மாநாடு முடிந்த பிறகு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்படும் பேரறிஞர் அண்ணா பொது நூலகத்தில் வைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நூலகத்தில் இந்த புத்தகம் வைக்கப்படும் போது அதன் அருகில் திருவள்ளுவர் கற்சிலை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது