தென்பகுதி மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி வழங்காதிருக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடபிராந்தியத்தில் மீன்பிடித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் வடக்கு, கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட செயலணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட மீன்பிடி திணைக்களம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன;
யுத்த சூழ்நிலைக்கு முன்னர் 2/3 பங்கு மீன்கள் வடபகுதியில் இருந்தே பிடிப் பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருகிறது. வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள், படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. வட பகுதி மீனவர்களுக்குத் தேவையான வசதிகள், உதவிகள் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.