”போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது” யாழ்ப்பாணத்தில் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vயாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டொவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். வடபகுதி மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென இவ்விரு அமைச்சர்களும் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 17 2010) யாழ். செயலகத்தில் ஊடகவியலர்களிடம் கருத்தத் தெரிவித்த பிரதி அமைச்சர் முரளிதரன் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போத யாழ்ப்பாணம் அபிவிருத்தியடைந்திருப்பதகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் எனவும், தடுப்பு முகாம்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கி சுமார் 200 யுவதிகளுக்கு முதற்கட்டமாக கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், மகிந்த அரசோ, அதன் அமைச்சர்களோ இனவாதமற்றவர்கள் எனவும், இந்த அரசின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான சகல பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒஸ்மானியா கல்லூரியில்  அம்மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் வீடுகள் கட்டங்களின் இடிபாடுகளை தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் அம்மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்து முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார். வடபகுதி முஸ்லிம் மக்களுக்கான உதவிகள் யாவும் அபிவிருத்தியடைந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    குறைந்தது, எத்தனை பேரை உள்ளே வைத்திருக்கிறீர்கள், அவர்கள் பெயர்கள் என்ன என்றாவது சொல்லுங்கள், அமைச்சர் ஐயா.

    இடையில் காணாமல் போகப் போகிறவர்களையாவது காக்க முடியும்.

    களுத்துறைச் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாகக் காரணம் இல்லாது சிறை வைத்திருக்கப்பட்டிருப்பவர்களின் கதை என்ன? டக்ளஸ் தோழரும் ஏதோ சிறை மீட்பதாக என்றோ சொன்னநினைவு.

    Reply