எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம்!

Dry_Rationகிளி நொச்சியில் மீள்குடியமாத்தப்பட்ட மக்களுக்கு நிவாரண உணவப் பொருட்கள் வழங்குவதில் தாமதங்கள் எற்படுவதாக மீள்குடிடியற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் படையினராலும் கிராம அலுவலர்களாலும் பதிவுகளுக்குட்படுத்துப்பட்டு குடும்ப அட்டை. நிவாரண உணவுப் பங்கிட்டு அட்டை என்பனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன.

ஆனால், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் அவர்களுக்கான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் எற்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 4ம் திகதி பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலருக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக் மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றப்படும் மக்கள் எவ்விதத் தொழில் வாய்ப்புக்களுமற்ற நிலையில் நிவாரண உணவுப்பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரில் வியாபார நிலையங்கள் அதிகரித்து வருகின்ற போதும் அவற்றில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.

Murukandi_Kovilகிளிநொச்சி நகரில் பலதரப்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள்  தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில் ஏற்கனவே வியாபாரம் செய்த வர்த்தகர்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையிலுள்ள புதிய வர்த்தகர்களும் வந்து வியாபார நிலையங்களை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலுள்ள பெரிய வியாபார நிறுவனங்களும் அவற்றின் கிளைகளை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளன.

Murukandi_Kovil மக்கள் கட்டம் கட்டமா மீள் குடியமர்த்தப்பட்டு வருகின்ற போதும், அவர்களின் வீடுகள் அழிவடைந்த நிலையில் கூடாரங்கள் அமைத்தே வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் போதே அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். எனவே, அதுவரை வியாபார நிலையங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பூனகரி மீனவர்களுக்கு உதவி வழங்க ‘வேள்ட் விசன்’ நிறுவனம் முன்வந்துள்ளது.

World_Vision_SLகிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள பள்ளிக்குடா பிரதேசத்தில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு கண்ணாடி இழைப் படகுகளும், அவற்றிற்குரிய இயந்திரங்களும் ‘வேள்ட் விசன்’ நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளன.

வளர்மதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு படகுகளும், பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நான்கு படகுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனையிறவுத் தடைமுகாமில் சகல வாகனங்களும் பதிவுக்குட்படுத்தப்படுகின்றன.

Elephant_Passகுற்றச்செயல்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்கும் வகையில்  ஆனையிறவு தடைமுகாமில் சகல வாகனங்களும் பதிவிற்குட்படுத்தப்படுகின்றன. வெளியிடங்களிலிருந்து யாழ்ப்பாணம் வரும் வாகனங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் என அனைத்தும் இவ்வாறு பதிவுகளுக்குட்படுத்தப்படுகின்றன.

வாகனங்களின் பதிவிலக்கம், அவற்றின் வகை மற்றும். வாகனச்சாரதியின் பெயர் என்பன ஆனையிறவுத் தடைமுகாம் படையினரால் பதிவுக்குட்படுத்தப்படுகின்றது. பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றமையும் குறிப்பிடத்க்கது.

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத்தப்படவுள்ளதோடு அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

உத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்கமளித்தார். தற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம். 1978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.

இதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும். புதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது. உத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.

இரு ஏஜென்சிகளின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்கு சென்றிருந்தபோது பல்வேறு இம்சைகளுக்கு உள்ளான ஆரியவதியை சவூதிக்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிநாட்டு வேலை முகவர் நிலையங்கள் இரண்டினது அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்தத் தீர்மானத்தை எடுத்து ள்ளது.

இதில் ஒரு நிறுவனம் ஆரியவதிக்கு விசாவைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் மற்றைய முகவர் நிலையம் ஆரியவதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத் துள்ளதாகவும் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சரும் சந்திப்பு

nerupama.jpgஇன்று இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் முதாலாம் திகதி சந்நித்துப் பேசவுள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

logo.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அடுத்தமாம் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தங்களின் முதற்கட்ட திருத்த யோசனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முகாமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம்

co-op-city.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தான்டியில் இயங்கி வந்த மினி கோப் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த முகாமையாளருக்கு மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

துன்புறுத்திய தம்பதியினர் கைது

ariyawathi_main.jpgஇலங்கை பணிப்பெண் மீது 24 ஆணி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் ஆணையும் அவரது மனைவியையும் சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என சில வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.