கிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள பள்ளிக்குடா பிரதேசத்தில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு கண்ணாடி இழைப் படகுகளும், அவற்றிற்குரிய இயந்திரங்களும் ‘வேள்ட் விசன்’ நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளன.
வளர்மதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு படகுகளும், பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நான்கு படகுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.