விஸ்வா

விஸ்வா

”வன்னியில் சரணடைந்த இயக்க உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படுவது போல் எங்களையும் விடுதலை செய்யுங்கள்” மகசின் சிறைக் கைதிகள் கோரிக்கை

Magazine_Prison“யுத்தம் முடிவிற்கு வந்த ஓராண்டு கடந்து விட்டது. எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளோம் உருக்கமான பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். உண்ணாவிரதங்கள் பலவற்றை நடத்தி எமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம். அதிகார பீடத்திலுள்ளவர்கள் எமக்கு வாக்குறுதிகள் தந்து எம்மை சமாதானப்படுத்தினார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. எமது நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயுள்ளன”

 இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள் அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மகஸின் சிறைச்சாலையிலுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தமை குறிப்பித்தக்கது. அப்போது அங்குள்ள தமிழ் கைதிகள் அவரூடாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மனு ஒன்றினை அனுப்பி வைத்தனர்.

Magazine_Prisonஅம்மனுவில் தெரிவிக்கப்படுள்ள விடயங்கள்: 
”பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் வேதனைகளை தாங்கள் அறிவீர்கள் . பலர் சட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றியும் ஏனையோர் சட்ட நடவடிக்கைகளுக்குள்ளான நிலையிலும் உள்ளோம். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய பட்டியலை இத்துடன் இணைத்துள்ளோம்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள நாம் பல்வேறு சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகள் சார்பாக இக்கடிதத்தை எழுதுகின்றோம். யுத்தம் முடிவடைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியும் எவ்வித பயனுமில்லை. நாம் எமது குடும்பத்தினரோடு இணைந்து வாழத் துடிக்கின்றோம்.  புதிய எண்ணங்களுடன் வாழத் துடிக்கின்றோம். எமக்கு விடுதலை கிடைக்கும் நாளுக்காக ஏங்குகின்றோம். 

யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சரணடைந்த இயக்க உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவது பாராட்டுக்குரியது. இது போன்று எம்மீதும் அரசின் பார்வை திரும்புமா? அல்லது, மறுவாழ்வு என்பது  எமக்கு மறுக்கப்பட்டு விட்டதா? தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தங்களின் மேலான கவனித்திற்கு இவ்விடயததைக் கொண்டு வருகின்றோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 7ம் திகதி  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கம் இடையில் நடைபெற்ற சந்திப்பில் சிறைளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதiலை குறித்து கூட்டமைப்பினர் பேசிய பொது ஜனாதிபதி அது தொடர்பாக  உறுதியான பதில் எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

Somawansa_Amarasinghe_JVPஜே.வி.பியினர் வன்னியில் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (June 16 2010) யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊடகவியாலாலர்களுடன் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உரையாற்றினார்.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் சரியான உதவிகளை வழங்கவில்லை எனவும் ஏ-9 பாதையின் இரு மருங்கும் அழகாக காட்சிதரும் நிலையில் உள்ளே சென்று பார்க்கும் போதே மக்களின் அவல நிலை தெரிகிறதென்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அது தோன்றியதற்கான காரணிகள் களையப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதே Nவைளை, வன்னியில் மக்களின் அவல நிலைகள் குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடி ஆராய்ந்தாகவும், அம்மக்களின் மிள்குடியேற்றம் மற்றும் அம்மக்களுக்கான அரசியல் திர்வு குறித்து எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும்  அதற்கு வெளியிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஜே.வி.பி தீhமானித்துள்ளதாகவும் ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியினர் நேற்று கிளிநொச்சி, இரணைமடு, தர்மபுரம், பரந்தன் ஆகிய பகுதிகளில்  மீpள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மிள்குடியேற்றபட்ட  மக்கள் தங்களின்  பிரச்சினைகள் குறித்தும், காணாமல் போன தங்களின் உறவினர்கள் குறித்தும், தடுப்புக் காவிலுள்ளவர்களின் விடுதலை குறித்தும் தங்களுடன் கலந்துரையாடியதாகவும் அத்துடன் விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ வங்கியில் அடைவு வைக்கப்பட்ட தங்களின் நகைகளை மீட்டுத்தர உதவுமாறும் ஜே.வி.பியினரிடம் கூறியதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைக்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதி நகைகளை படையினர் மீட்டுள்ளதாக  முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்தவ முகாம் நாளை நடைபெறுகிறது!

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (17-06-2010) நடைபெறவுள்ளது. கிளிநொச்சி கனகபரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது. 

கண். பல். காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு, பெண்களுக்கான நோய்கள், இதயநோய், புற்று நோய் உட்பட அனைத்து நோய்களுக்கான  மருத்துவ சேவைகளும் நடைபெறும் என கிளிநொச்சி பிராந்தி சகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் தெரிவித்துள்ளார். 

மேற்படி நோய்களுக்கான வைத்திய நிபுணர்கள், நவீன உபகரணங்களுடன் சமுகமளித்து சிகிச்சையளிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி நகரிலிருந்து கனகபரம் பாடசாலை வரை நோயாளிகளுக்கான வாகன வசதிகளும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம்!

சாவகச்சேரி நீதவானாக பணியாற்றய ரி.ஜே.பிரபாகரன் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சாவகச்சேரி நீதிவானாக எஸ். அப்துல்லா பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணம் வவனியா நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (June 21 2010) முதல் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சாவகச்சேரி நீதவான் அக்கரைப்பற்றுக்கும், வவனியா நீதவான் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம் நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன்  நீதி விசாரணைகளை மிகவும் கடுமையாக மேற்கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

School_Girlsயாழ்ப் பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களின் செயல்களைக்  கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதியில் செல்லும் இளம்பெண்கள் குறிப்பாக, பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் ஆகியோரிடம் தகாத முறையில் சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்லும் வேளைகளிலும், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளைகளிலும் வீதிகளில் நின்று சே~ட்டைகளின் ஈடுபடும் இளைஞர்களின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கட்டாக்காலிகள் போல் திரியும் இளைஞர் குழுக்கள் பல வீதிச் சண்டைகளில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் பொலிஸார் தற்போது அதிகளவில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதே வேளை, குடாநாட்டில் முறையான ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்களின்றி வாகனங்களைச் செலுத்துவோர் மீதும் பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வன்னி, யாழ்ப்பாணத்திற்கு ஜே.வி.பியினர் மூன்று நாள் விஜயம்.!

Chandrasekaran JVPஜே.வி.பி கட்சியின் குழுவினர் June 14 2010 வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளனர். ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர் சந்திரசேகரன், பிமல் ரட்ணாயக்க உட்பட்ட குழுவினர் இதில் அடங்குகின்றனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜே.வி.பியனரிடம் கூறி கண்ணீர் வடித்ததாக ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான இவர்களின் பயணம் மூன்று தினங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். வவனியா அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட தாம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மின்சார பாவனை அகற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர்ப்பகுதியில்  இராணுவ மினி முகாம்களிலும், காவலரண்களிலும்  மின்மானி (மீற்றர்) பொருத்தாமல் பெறப்பட்ட மின்சார விநியோகம் அகற்றப்பட்டுள்ளன. நகர்ப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரிலேயே மின்சார சபை ஊழியர்களினால் இவை அகற்றப்பட்டுள்ளன. 

இராணுவத்தின் 522 ஆவது படையணியின் மக்கள் தொடர்பாடல் கூட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையால் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியாமை குறித்து மின்சார சபையின் சாவகச்சேரி மின் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்தே படையதிகாரியினால் இவற்றை அகற்ற மின்சார சபைக்கு பணிக்கப்பட்டது.  இதனையடுத்து இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 32 மின் தொடர்புகள் அகற்றப்பட்டன. இனிவரும் நாட்களில் சட்டபூர்வமாக மின்மானிகள் பொருத்தப்பட்டு குறித்த இடங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதே வேளை, தென்மராட்சிப்பகுதியில் சட்டவிரோத மின்சார பாவனையாளர்களை கண்டுபிடிக்கவும்  படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த முறையற்ற மின் பாவனையை படையதிகாரி உடனடியாக அகற்ற முன்வந்தமை ஒரு முன்மாதிரி நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ‘ஜெர்மன் வாரம்’ நடைபெறுகிறது!

Germany_Flagயாழ்ப் பாணத்தில் இன்று முதல் (14-06-2010) ‘ஜேர்மன் வாரம்’ நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐந்து நாட்களுக்கு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் யாழ்.கோவில் வீதியிலுள்ள ஜி.ரி.இசட் நிறுவன விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். 

தொடர்ந்து இன்று மாலை யாழ. பொதுநூலக மண்டபத்தில் ‘யாழ்ப்பாணத்தில் ஜேர்மன் வாரம்’ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். நாளை 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான நிகழ்ச்சிகள் யாவும் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது கலையகத்தின் வளாகத்தில் நடைபெறும்.

தமிழ் மொழியிலான அரங்க நிகழ்வு 15ம் திகதி நடைபெறும். 16ம் திகதி ‘ஜெர்மனியில் கல்விகற்றல்’ எனும் தலைப்பில் ‘டாட்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹெய்டி ஸ்ரெய்னர் உரையாற்றுவார். அன்று மாலையிலிருந்து 18ம் திகதி மாலை வரை ஜேர்மன் மொழியலான திரைப்படங்கள் காண்பிக்கப்படும். 

18ம் திகதி மாலை தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜெர்மன் சேர்பிய அணிகளுக்கிடையிலான போட்டி திரையில் ஒளிபரப்பப்படும்.  நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெர்மன் வார’ நிகழ்வுகள் கொழும்பிற்கு வெளியே முதற் தடவையாக   இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

”முல்லைத்தீவில் 22 000 வீடுகள் அழிவடைந்துள்ளது.” முல்லை அரச அதிபர்

Imelda_Sugumar_GAமுல்லைத் தீவு மாவட்டத்தில் மட்டும் போரின் காரணமாக 22 ஆயிரம் வீடுகள் முற்றாகச் அழிவடைந்துள்ளதாக முலலைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ஐயாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை மீளமைப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மட்டும் 60 வீதமான மக்கள் மிள்குடியேற்றப்பட்டு உள்ளதாகவும், முல்லை மாவட்டத்தில் எல்லாமாக இதுவரை 13 612 குடும்பங்களைச் சேர்ந்த 39 470 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெடி பொருட்கள் அகற்றும் பணிகள்  நிறைவடைந்ததும் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் முதன்மையான தொழில் விவசாயமாகும். இவ்வருட காலபோகத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் நெல் விதைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், கைவிடப்பட்ட குளங்கள், காணிகளை திருத்துவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குமுதினி படகில் பயணிக்க ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

Kumudini_Boatகுறிக் கட்டுவான் – நெடுந்தீவிற்கிடையே சேவையில் ஈடுபட்டுவரும் குமுதினி படகில் பயணிப்பதற்கு பயணிகளுக்கு இப்போது ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. குமுதினி படகு அடிக்கடி பழுதடைந்து வருவதால் ஒரு தடவையில் நூறு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஒரு தடவையில் நூறு பயணிகளுக்கு மட்டுமே ‘டோக்கன்’ வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதகாரி தெரிவித்துள்ளார்.

Kumudini_Boatகுமுதினி படகில் முன்னர் நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, இப்படகு அடிக்கடி பழுதடைந்த வருவதால் இதற்கான மாற்று ஒழங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நெடுந்தீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.