சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம்!

சாவகச்சேரி நீதவானாக பணியாற்றய ரி.ஜே.பிரபாகரன் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சாவகச்சேரி நீதிவானாக எஸ். அப்துல்லா பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணம் வவனியா நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (June 21 2010) முதல் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சாவகச்சேரி நீதவான் அக்கரைப்பற்றுக்கும், வவனியா நீதவான் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம் நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன்  நீதி விசாரணைகளை மிகவும் கடுமையாக மேற்கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    மாணவன் கபிலநாத்தின் கொலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத குற்றம். இதற்கு துணை போகிறவர்கள் சந்தேகமில்லாமல் சமூகத்துரோகிகளாகவே இருப்பார்கள். இது புலிகளின் அர்த்தத்தில் அல்ல.
    சாதாரணமனிதனாக இருக்கும் நான் இந்த நீதிபதியைப்பார்த்து ஒரு கேள்வி தான் கேட்கிறேன். ஒரு மொட்டைகடித்தை வைத்து வழக்கு தொடர நீதிமன்றத்திற்கு உரிமையிருக்கிறதா? என்பதே!. இதற்கு இந்த நீதிபதியோ அல்லது நீதித்துறையோ பொதுமக்களுக்கு கருத்துச் சொல்ல முடியுமா? சொன்னால் லங்காபுரிமக்கள் அதிஷ்ரசாலிகளே!.

    Reply