யாழ்ப் பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களின் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதியில் செல்லும் இளம்பெண்கள் குறிப்பாக, பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் ஆகியோரிடம் தகாத முறையில் சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்லும் வேளைகளிலும், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளைகளிலும் வீதிகளில் நின்று சே~ட்டைகளின் ஈடுபடும் இளைஞர்களின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கட்டாக்காலிகள் போல் திரியும் இளைஞர் குழுக்கள் பல வீதிச் சண்டைகளில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் பொலிஸார் தற்போது அதிகளவில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே வேளை, குடாநாட்டில் முறையான ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்களின்றி வாகனங்களைச் செலுத்துவோர் மீதும் பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.