சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பிரிவினைவாதம் தலைதூக்காதிருக்க உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகின்றனர் – ஜனாதிபதி மேதின செய்தி

mayday01.jpg“கட்சி,  நிற வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டை வெற்றியடையச் செய்யும் பாதையைத் தேசம் அடைந்துள்ளது. இதன் மூலம் உழைக்கும் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படுமென திடமாக நம்புகின்றேன்” இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உலகெங்குமுள்ள தொழிலாளர்கள், மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு உழைக்கும் மக்கள் வழங்கிவரும் பலத்தை மறந்து விடமுடியாது. ஒரு பக்கத்தில் முழு உலகையும் அச்சத்துக்குள்ளாக்கி வருவதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு நாம் அச்சமின்றி முகங்கொடுத்தோம். அவ்வாறு முகங்கொடுத்து இன்று நாம் சுதந்திரமான ஒரு வருடத்துக்குள் காலடி வைத்துள்ளோம்.

அதேபோல் உலக பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் வளங்களைப் பாதுகாத்து மக்கள் வாழ்க்கையை சுபிட்சமடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிகள் சகலவற்றிலும் பங்குதாரராவதற்கு இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் பொறுமையைக் கையாண்டிருப்பது உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் கெளரவத்துக்கு பாத்திரமாகலாம் என நம்புகிறேன்.இன்று நாம் வெற்றி மீது வெற்றிகொண்டு தேசத்தைப் பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில், இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலைதூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகிறார்கள்.

இவ்வாறான எல்லா சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றும் பயணத்தின் போது மக்களுக்கு உதவிளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளமை உழைக்கும் மக்களுடன் இருந்த எனக்கு பெருமையாதனதாகும். இன்று அரச சேவையைப் போலவே அரச ஊழியர்களும் உறுதியுடன் செயற்பட்டு வருகிறார்கள். தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளையும் நாம் மறந்துவிடவில்லை. விவசாயப் பொருளாதார உற்பத்திகளுக்கான திடமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும், தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலன்காக்கும் அரசாங்கம் அதன் பொறுப்பை சரியாக உணர்ந்துகொண்டதன் காரணமாக எந்த உதவிகளையும் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப மேற்கொள் ளப்படும் நடவடிக்கைகளைப் பலப்படுத்திய நாட்டின் உழைக்கும் சகலவித மக்களுக்கும் தேசத்தின் கெளரவம் உரித்தாகட்டும். எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.

சங்குப்பிட்டியில் இரும்புப் பாலம்!

Mahinda Rajapaksaநாவற்குழி காரைதீவு மன்னார் ஊடாகச் செல்லும்  ஏ32  வீதியில் படகுச்சேவை நடைபெறும் சங்குப்பிட்டிப் பகுதியில் தடையின்றி வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் இரும்புப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நிர்மானப்பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இதற்கு 150 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியம் ஊடாக அந்தத் தொகையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமைகளை பாதுகாத்து அபிவிருத்தியை முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்

may-day.jpgதொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்கு திடசங்கற்பம் பூணுவதற்கு இன்றைய நாளில் தொழிலாளர் வர்க்கத்தினர் கடமைப்பட்டுள்ளனரென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

தொழிலாளர் வர்க்கத்தின் ஞாபகார்த்த தினமாக கருதப்படும் உலக தொழிலாளர் தினமான மே தினத்தை உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கை வாழ் தொழிலாளர் மக்களும் மிகவும் அபிமானத்துடன் கொண்டாடுகின்றனர்.

இலங்கை வாழ் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்கள் போராடி இது வரையில் பெற்றுக் கொண்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது மக்களின் அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். தொழிலாளர் மக்கள் தமது உரிமைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் அதே நேரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பானது எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

முப்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்த பயங்கரவாத போராட்டத்துக்கு முடிவினை கண்டுவரும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை போன்ற முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக்கு உலக பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அது முக்கியமாக தொழில் துறைக்கும் வெளிநாட்டு வருமான வழிகளுக்கும் பொதுவாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மோசமான முறையில் தாக்கம் செலுத்துகின்றது.

எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும், சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பாரதூர பொறுப்பினை ஓர் அரசாங்கம் என்றவகையில் நாம் பொறுப்பேற்றுள்ளோம். இந்தப் பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி தொழிலாளர் வர்க்கத்தின் ஒத்துழைப்பானது ஏனைய காலங்களை விடவும் இன்று இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இந்தக் குறிக்கோளை முன்வைத்து மே தினத்தைக் கொண்டாடும் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது வாழ்த்துரைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாதெனிய அநுராதபுரம் வீதி மறுசீரமைப்பு

tbekanayake.jpgபாதெனிய – அநுராதபுரம் வீதியை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் பாதெனிய அநுராதபுரம் வீதியின் 80 கிலோ மீட்டர் தூரம் மறுசீரமைக்கப்படவுள்ளது கொரியா எக்ஷிமி வங்கியின் கடனுதவித்திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5722 மில்லியன் ரூபா இதற்குச் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைப்பு

நிவாரணப் பொருட்களை கையளிக்கும் இந்தியத் தூதர் இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தமிழக அரசு சுமார் 900 மெட்ரிக் டண்கள் அளவிலான நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

சுமார் 40,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் தனித்தனி பொதிகளாக கட்டப்பட்டுள்ள இதில் அரிசி, பருப்பு, சீனி, சமையல் பாத்திரங்கள், உடைகள் ஆகியவை உட்பட குடும்பம் ஒன்றுக்கு இரண்டு வாரகாலம் தேவையான பொருட்கள் இருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் அலோக் பிரசாத் நேற்று முறைப்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் அளித்துள்ளார். வன்னியில் மோதல்கள் ஆரம்பித்த பிறகு தமிழக அரசு அனுப்பும் இரண்டாவது தொகுதி உதவிப் பொருட்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது

ஷெல் – 191/=, லாஃப் – 238/= சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  “ஷெல்” சமையல் எரிவாயுவின் விலை 191 ரூபாவாலும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை 238 ருபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி 1309 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட “ஷெல்” சமையல் எரிவாயு நேற்று நள்ளிரவு முதல் 1500 ருபாவுக்கும் 1069 ரூபாவுக்கு விற்கப்பட்ட “லாப்” சமையல் எரிவாயு 1307 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றமே இவ் அதிகரிப்புக்கு காரணமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒரு வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒர தடவையாக ஆறு முறை அதன் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் “ஷெல்” மற்றும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை அடுத்தடுத்து குறைவடைந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 358 அமெரிக்க டொலர்களாகவிருந்த ஒரு மெற்றிக் தொன் உலக சமையல் எரிவாயுவின் விலை தற்போது 480 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேமாத்துக்கான விலைதிருத்தத்தில் தவிர்க்க முடியாத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“ஷெல்” நிறுவனம் 337 ரூபா வரையிலும் “லாப்” நிறுவனம் 250 ரூபா வரையிலும் விலையதிகரிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் பாவனையாளர்கள் நன்மை கருதி முறையே 191 ரூபா மற்றும் 238 ரூபா விலையதிகரிப்பை மேற்கொள்ளவே நுகர்வோர் அதிகார சபை அனுமதித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சீனி, பருப்பு ஆகியவை ஆகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.

அதற்கான சுற்று நிருபமும் நேற்று நள்ளிரவு முதல் காலாவதியாகியிருப்பதால் மீண்டும் அவை பழைய விலைக்கே விற்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மா, சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்து விநியோகிப்பதற்காக உலகச் சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை

keheliya_rambukwella.jpgவெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்பரி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தொடர்பான தேசியக்கொள்கை ஒன்று குறித்து விளக்கமளிக்கவும் வெளிநாட்டுச் செலாவணி மற்றும் மாற்று வழிகளில் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு அளிக்கின்ற பங்களிப்பை வரவேற்பதும் இதன் நோக்கமாகும்.

ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்படவேண்டும் ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்கவில்லை -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpg
ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும் எனக் கூறிய ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபயவர்தன ஊடகச் சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடை எதுவும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மாத்தறை ராகுலக் கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர்களுக்கான “எமது தாய் கூறும் கதை’என்ற புத்தகத்தை வெளியிட்டபின் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பத்திரிகைச் சுதந்திரம் நாட்டில் இல்லையென்று கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. ஒரு அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று அந்த அரசாங்கத்திற்கு சக்தியையும் வலுவையும் முன்னெடுத்துச் செல்பவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த அர்ப்பண சேவையை அரசாங்கம் மறந்துவிட்டது.

அதேபோல் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் தவறுகளையும் வெளிப்படையாகவே வெளியிட்டு அவைகளைத் திருத்திவரவும் பின் நிற்பதில்லை. துணிச்சலுடன் நேர்மையாகச் செயல்படுபவர்களே உண்மையான ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மைகளை எழுத வேண்டும். எதையும் மிகைப்படுத்தி பிழையான செய்திகளை எழுதுவது பத்திரிகைத் தர்மத்துக்கு பிழையானது. சிலர் சில பத்திரிகையாளர்களை தமது கைக்குள் வைத்துக்கொண்டு தவறான கருத்துகளை வெளியிட முனைவது பிழையாகும்.

ஊடகவியலாளர்கள் எப்பக்கமும் சாராது எப்போதும் நடு நிலைமையிலேயே எழுத வேண்டும். இந்தநாட்டின் பத்திரிகைச் சுதந்திரம் எக்காரணம் கொண்டும் இருட்டடிப்புச் செய்யப்படமாட்டாது. சிறுவர்களை நல்லொழுக்கத்துடனும் கலாசாரப் பண்புகளுடனும் வளர்த்தெடுக்கவும் இவ்வாறான புத்தகங்கள் மென்மேலும் படைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையை இப்போது மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். மேலும் இச் சிந்தனையின் மூலம் சகல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யசூசி அகாசி இன்று இலங்கை விஜயம்

akashi2.jpgஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வரவுள்ளார். இன்று இரவு இலங்கை வரவுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வவுனியா விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவியவருகிறது.

அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத் தளத்தை தாக்க திட்டமிட்டோருக்கெதிராக நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க இராணுவத் தளத்தைக்தாக்கி படையினரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மூன்று அல்பேனிய முஸ்லிம்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பையளித்தது. இந்த மூன்று முஸ்லிம்களும் சகோரர்களாவர். டேர்டின்டுகா வயது 30, ஷெய்ன்டுகா 29, எல்ஜிவீர்டுகா ஆகியோருக்கே ஆயுட்கால சிறைத் தண்டனையளிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் டிக்ஸ் துறைமுகத்தைத் தாக்க திட்டமிட்டதாகக் கருதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இன்னும் இருவர் கெரிஹில் என்ற பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். வியாபார நோக்கில் இவர்கள் அடிக்கடி டிக்ஸ் துறைமுகத்துக்குச் சென்று வந்தனர்.

இதனால் இத் துறைமுகம் பற்றிய பரீட்சயம் இவர்களிடமிருந்தது. இதைக் கொண்டு இவ் வியாபாரிகள் துறைமுகத்தை தாக்கத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இவர்கள் கைதான பின்னர் இந்தத் தாக்குதல் இன்னும் நடாத்தப்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்பேனிய முஸ்லிம் சகோதரர்கள் நன்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். புனித யுத்தமாக இதைக் கருதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலையாவார்கள் எனத் தான் நினைக்கவில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்துடன் இத் தீர்ப்பை வழங்கினேன்.

மூன்று பிள்ளைகளையும் சிறைக் கைதிகளாகக் காண்பது பெற்றோர்களுக்குப் பெரும் வேதனையளிக்கும் என்பது தனக்குத் தெரியுமென்றும் மாவட்ட நீதிபதி தனது தீர்ப்பின் போது டுகா சகோதரர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடத்தில் தெரிவித்தார்.

இதன் போது டுகா சகோதரர்கள் சிறைக் கைதிகளின் பச்சை நிற சீருடையை அணிந்து கையில் விலங்கிடப்பட்டுக் காணப்பட்டனர். நீதிவான் தீர்ப்பை வாசிக்கும் போது தாங்கள் அப்பாவிகள் அமெரிக்க உளவுத்துறை மிகத் திறமையாக எங்களை இதில் சிக்கவைத்தது என ஆவேசத்துடன் கூறினர். குற்றவாளிகளுக்குகெதிரான முறைப்பாடுகள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனது அனுபவத்தில் இவ்வாறு விவரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையைக் கண்டதில்லையென நீதவான் கூறினார். அல்பேனிய மூன்று சகோதரர்களுடன் மேலும் இரண்டு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்விருவருக்கான தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்படவிருந்தது.  இச் செய்தி எழுதப்படும் வரை இது பற்றித் தெரியவில்லை. ஒருவர் ஜோர்தானில் பிறந்தவர். இவர் ஆட்டோ சாரதியாகவும் மற்றவர் துருக்கியில் பிறந்தவர் ஸ்டோர் காப்பாளராகவும் கடமையாற்றியவர்கள்.

அமெரிக்காவின் உளவுத்துறை கைதான ஐவர் அடங்கிய ஒளி, ஒலி நாடாவை சமர் ப்பித்திருந்தது. நூறு மணித்தியாலங்கள் கொண்ட இந் நாடாக்களில் புனிதப் போர் குறித்துத் தீர்மானிக்கப்பட்ட விடயம் புலனாய்வுத்துறையின் முஸ்லிம் அதிகாரி ஓமர் ஊடாகத் தெரியவந்தது.

இந்த ஐந்து பேரும் கைதாகி எட்டு வாரங்கள் சிறையிலிருந்தனர். டுகா சகோதரர்களின் பெற்றோர் எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா அவ்வாறான பிள்ளைகளைத் தாங்கள் பெற்றெடுக்கவில்லை எனக் கூறினர்.