ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வரவுள்ளார். இன்று இரவு இலங்கை வரவுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வவுனியா விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவியவருகிறது.
அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.