::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்ட 440 பொதுமக்கள் விபரம்

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள 440 வன்னிப் பொதுமக்களின்  பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28
151. எஸ்.தரன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 2)
152. பொன்னையா, மல்லாவி, முல்லைத்தீவு, (வயது 68)
153. எஸ். ராணி, கிளிநொச்சி, (வயது 29)
154. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 20)
155. எஸ். சகுந்தலாதேவி, முல்லைத்தீவு,(வயது 55)
156. எஸ். சந்திரன், கோணாவில், (வயது 39)
157. எஸ். சிவனேசன், அலம்பில், முல்லைத்தீவு, (வயது 32)
158. கேதுஷன், இரணைபாலை, (வயது 07)
159. ஐ.சுதர்ஷனி, இரணைபாலை,(வயது 8)
160. திலகமலர், இரணைபாலை, (வயது 38)
161. ஐ. சங்கீதா, இரணைபாலை, (வயது 5)
162. நந்தினி
163. எஸ். ஜயவதனி, வல்லவராயக்கட்டு, கிளிநொச்சி, (வயது 29)
164. வி.பாலசிங்கம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 23)
165. பி. தனுஷ், புதுக்குடியிருப்பு, (வயது 4)
166. பி. தனுஷியா, புதுக்குடியிருப்பு, (வயது 2.5)
167. என். தவமணி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 60)
168. கம்ஸன், மாதலை, முல்லைத்தீவு,
169. என்.பிரபாகரன், பொக்கண அடைக்காடு, முல்லைத்தீவு, (வயது 30)
170. என். சுகுந்திரன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 34)
171. எஸ். நவரஸ்யன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 01)
172. கே. சுரேந்திரன், பொக்கணை, (வயது 28)
173. வி. இலங்கநாதன், தெல்லிப்பழை (வயது 38)
174. எஸ். துவாகரன், 170…, (வயது 04)
175. எஸ். தர்சியன், 170…, (வயது 06)
176. எஸ். துஷாந்தி, 170…, (வயது 32)
177. ரஞ்சியாவதனி, இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 29)
178. வி. நிஸாந்தன், இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 03)
179. அபிநயா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 08)
180. புஹாரி உம்மா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 28)
181. அபிர்தா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 06)
182. இசைநிலா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 2.5)
183. அடையாளம் காணப்படாதவர்.
184. என். கமலா பூரணம், இராமநாதபுரம்
185. எம். சஹாநந்தி, இராமநாதபுரம், (வயது 34)
186. எஸ். புஷ்பமலர், முல்லைத்தீவு, (வயது 27)
187. ஹம்ஸிகா, முல்லைத்தீவு, (வயது 01)
188. தேனஹா, புதுக்குடியிருப்பு, (வயது 40)
189. ஆர். உதயராஜ், ஆனந்தபுரம், கிளிநொச்சி, (வயது 24)
190. எஸ். ராஜசெல்வி, கிளிநொச்சி, (வயது 40)
191. எஸ். சுஜாதா, கிளிநொச்சி, (வயது 08)
192. எஸ். விஜிதா, கிளிநொச்சி, (வயது 09)
193. எஸ். சைஜா, கிளிநொச்சி, (வயது 04)
194. கிருஷ்ணதேவி, கிளிநொச்சி, (வயது 61)
195. புலா, யாழ்ப்பாணம், (வயது 03)
196. அனுசியா, யாழ்ப்பாணம், (வயது 29)
197. எஸ். உனேஷிகா, யாழ்ப்பாணம், (வயது 06)
198. எம். பத்மதேவி, பொக்கணை, கிளிநொச்சி, (வயது 50)
199. ஷியாந்தன், பொக்கணை, கிளிநொச்சி, (வயது 02)
200. பி. விஜிதா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 28)
201. கபிஷனா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 02)
202. கவிராஜ், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
203. கவிசாலினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 06)
204. ஐ. சந்திரன், 4 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 68)
205. கமலநாதன், கிளிநொச்சி, (வயது 54)
206. கே. பிரவீனா, இராமநாதபுரம், கிளிநொச்சி,(வயது25)
207. கே. அலிசான், கிளிநொச்சி, (வயது2.5)
208. கே.ஜே. கைலநாதன், இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 56)
209. எஸ். டினேஷானந்தன், கல்லவராயன் கட்டு, கிளிநொச்சி, (வயது 31)
210. எஸ். சரோஜினிதேவி, கிளிநொச்சி, (வயது 25)
211. செல்வராஜ், கிளிநொச்சி, உத்தகுளம், (வயது 25)
212. கம்ஸிகா, உத்தகுளம், கிளிநொச்சி, (வயது 01)
213. ஐங்கரன், கிளிநொச்சி, (வயது 33)
214. கே. சுகன்யா, கிளிநொச்சி, (வயது 27)
215. கௌரிசன், கிளிநொச்சி, (வயது 05)
216. கதிரினியா, கிளிநொச்சி, (வயது 07)
217. ஐ. ரம்யாதேவி, கிளிநொச்சி, (வயது 31)
218. ஐ. அபிநயன், கிளிநொச்சி, (வயது 08)
219. எஸ். மகிந்தன், கிளிநொச்சி, (வயது 08)
220. எஸ். மாதவி, கிளிநொச்சி, (வயது 10)
221. ஆர்.குகனேசன், தர்மபுரம், வயது 19
222. ஆர்.கலைச்செல்வி, ஞானிமடம், பூநகரி, வயது 26
223. ரி.சுந்தரராஜா, ஒட்டுசுட்டான், வயது 39
224. எஸ்.ராகுகுமார், ஞானிமடம், பூநகரி, (வயது 32)
225. ஆர்.பரம்சோதி, பூனரிக்குளம், கிளிநொச்சி, வயது 33
226. கோபி, பூனரிக்குளம், வயது 01
227. ஆர்.ராஜிபான், கிளிநொச்சி, வயது 03
228. ஆர்.பரண்யா, கிளிநொச்சி, வயது 05
229. ஆர்.சிவகுமார், இரணபால, முல்லைத்தீவு, (வயது 31)
230. எஸ்.விதுரன், இரணபால, முல்லைத்தீவு, (வயது 1.5 )
231. எம்.வேணி, வட்டக்கச்சி, முல்லைத்தீவு, (வயது 07 )
232. ரஞ்சன் குமார், வன்னேரிக்குளம், (வயது 36 )
233. வி.சுகந்தினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 23 )
234. எஸ்.லோஜினி, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு (வயது 13 )
235. எஸ்.புவியரசி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 08 )
236. எஸ்.தனுஷா, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 05 )
237. எஸ்.விஜயலட்சுமி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 38 )
238. ஏ.ஜனனி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 12 )
239. ஏ.சந்திரஜயந்தி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 44 )
240. ஏ.கஜிவன், கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 04 )
241. ஏ.திவ்யா, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 07 )
242. மனோன்மணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது 64 )
243. ஜே.சுகந்தினி, முரசுமோட்டை, கிளிநொச்சி, (வயது 03 )
244. எஸ்.கோடீஸ்வரி, முரசு மோட்டை, கிளிநொச்சி, (வயது 40 )
245. எஸ்.வஸ்தியன், மன்னார், வயது 40
246. எம்.அல்பிரட், மகாறம்பைக்குளம், வவுனியா, (வயது 54 )
247. எஸ்.தில்லை நடராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 37)
248. ஜனநாதன், முல்லைத்தீவு, (வயது 28 )
249. ரி.அகல்யா,புதுக்குடியிருப்பு, (வயது 08)
250. வி.ராசன்டா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,வயது 57
251. ரி.ஜான்ஸி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வயது 13
252. ஏ.போறஜனி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 01
253 . ஏ.போனேஸ்வதி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 30
254. பவளன், கண்டாவளை, வயது 05
255. யு.கந்தரூஸி, கண்டாவளை, வயது 04
256. யு.அபிலாஷ், கண்டாவளை, வயது 06
257. யு.பனுஷன். கண்டாவளை, வயது 05
258. யு.ஐஸ்வரி, கண்டாவளை, வயது 07
259. கே.ராஜலட்சுமி, புதுக்குடியிருப்பு, வயது 65
260. ரி.மல்லிகாதேவி, பூநகரி, வயது 48
261. பார்வதி, விஸ்வமடு, வயது 59
262. வி.வேணியா, கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 35
263. வி.குகேந்திரன், கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 02
264. வை.ராஜேஸ்வரி, 10 ஆவது, அஞ்சன்குளம், முல்லைத்தீவு, வயது 45
265. வை.கீதா, முல்லைத்தீவு, வயது 26
266. எம்.தியாகராஜ், தோம்பிலுவில், வயது 67
267. கே.ஜெயசீலன், நொச்சிக்குளம், வயது 30
268. என்.முத்துசாமி, மாங்குளம், வயது 3
269. என்.வினோஜன், மாங்குளம் வயது 1.5
270. என்.குலஞானேஸ்வரி, மாங்குளம், வயது 33
271. எஸ்.ஜேயராசா, வற்றாப்பளை, வயது 53
272. சருஜன், கனகராயன் குளம், வயது 8
273. விமலாதேவி, பொக்கணை, வயது 45
274. தினஜா, கனகராயன் குளம், வயது 2
275. ரி.சுமதி, கனகராயன்குளம், வயது 26
276. எஸ்.புவனேந்திரன், பொக்கணை, வயது 62
277. கே.மகேஸ்வரி, சுதந்திரபுரம், வயது 50
278. ஜே.லக்ஸிகா, பொக்கணை, வயது 03
279. அமராவதி, பொக்கணை, வயது 45
280. ஏ.சுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு வயது 62
281. ஏ.காந்தரூபன், தர்மபுரம், வயது 22
282. ஏ.ஜெயவனிதா, பழயர் வெள்ளயன் குளம், வயது 25
283. ஜோதிகன், பழயர் வெள்ளயன்குளம், 6 மாதம்
284. டினேஸ், பழயர் வெள்ளயன்குளம், வயது 03
285. ஆரையம்மாள், தர்மபுரம், வயது 44
286. ரஜீவன், ராமநாதபுரம், வயது 2.5
287. அஜிதா, ராமநாதபுரம், வயது 10
288. அடையாளம் காணப்படவில்லை இறந்துள்ளார்.
289. சீதாலட்சிமி, ராமநாதபுரம், வயது 37
290. ரி.கிட்ணசாமி, தர்மபுரம், வயது 54
291. ரி.அற்புததேவி, மாதலம், 55
292. எஸ்.விஸ்வநாதன், புளியங்குளம் வயது 35
293. கே.கந்தையா, பரந்தன், கிளிநொச்சி வயது 74
294. பி.ஜானகி, குமாரபுரம், பரந்தன், வயது 65
295. சிவக்கொழுந்து, நாட்டங்காடு, வயது 77
296. நாகமுத்து, நாட்டங்காடு, வயது 83
297. பி.பஞ்சலிங்கம், பரந்தன், வயது 48
298. என்.நாகம்மா, சுழிபுரம், யாழ்ப்பாணம்,வயது 80
299. மரணம்பெயர் தரப்படவில்லை வயது 70
300. கனகதேவி, நாட்டங்காடு, வயது 34
301. சுபிஷன், நாட்டங்காடு, வயது 03
302. ராமஜீவஹன், ஆண்டாங்குளம், மன்னார், வயது 19
303. யசிதா, வன்னிபுரம், முல்லைத்தீவு, வயது 13
304. கே.அப்புத்துரை, அடப்பன், யாழ்ப்பாணம், வயது 80
305. கே.யசோதா, வல்லிபுரம், வயது 33
306. கே.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 53
307. திவாரட்ணமணி, பளை, வயது 54
308. ஏ.பிரமகுமார், மாங்குளம், வயது 41
309. அனுஜஹா, இறிவில்பளை, வயது 21
310. கே.ஆறுமுகம், நெடுந்தீவு, வயது 81
311. பி.திலகவதி, மல்லாவி, வயது 56
312. ரி.சுகுமார், பரந்தன், கிளிநொச்சி, வயது 30
313. ஏ.சாருமதி, புதுக்குடியிருப்பு, வயது 27
314. ஏ.ஜனகன், புதுக்குடியிருப்பு, 6 மாதம்
315. ஏ.டினுஷிலா, வட்டக்கச்சி, வயது 09
316. ஏ.டுனுஷா, வட்டக்கச்சி, வயது 08
317. பி.புஸ்பராணி, கந்தபுரம், கிளிநொச்சி, வயது 54
318. எம்.நிஷாந்தன், விசுவமடு, வயது 20
319. ஆர்.நிஷாந்தி, வட்டக்கச்சி, வயது 27
320. எம்.ராஜரட்ணம், மாதலன், வயது 58
321. எஸ்.கமலராஜா, வட்டக்கச்சி, வயது 18
322. வை.பிருந்தாதேவி, வயது 40
323. எஸ்.நிதர்சன், வட்டக்கச்சி, வயது 12
324. எஸ்.கிரிஜா, வட்டக்கச்சி, வயது10
325. எஸ்.நிரோஷன், வட்டக்கச்சி, வயது 8
326. மதிவதனா, வட்டக்கச்சி, வயது 31
327. தனசிகாவதி, உப்பளாங்குளம், வவுனியா, வயது 62
328. எஸ்.மனாகா, பொக்கண, வயது 28
329. டிலானி, பொக்கண, வயது 04
330. வி.தட்சணி, புதுக்குடியிருப்பு, வயது 30
331. அக்ஷணா, புதுக்குடியிருப்பு, வயது 1.5
332. எம்.கிரிஷ்ணபிள்ளை, சுகந்தபுரம், வயது 52
333. எஸ்.மார்க்கண்டு, ஒட்டுசுட்டான், வயது 70
334. ரவிக்குமார், ஒட்டுசுட்டான், வயது 30
335. எஸ்.பிரியதர்சனி, வட்டக்கச்சி, வயது 24
336. விஜயலட்சுமி, அக்கராயன்குளம், வயது 46
337. மிதுனா, விசுவமடு, வயது 13
338. வி.ஆரியமாலா, தாளையடி, வயது 59
339. எஸ்.சிவானந்தன், வட்டக்கச்சி, வயது 32
340. ஆர்.சந்திரதாஸ், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 34
341. எஸ்.கந்தசாமி, வல்லிபுரம், புதுக்குடியிருப்பு, வயது 60
342. எஸ்.லோகராஜா, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 43
343. சி.கமலநாதன், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 57
344. கே.நிரோஜினி, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 15
345. வை.துஷானி, அலம்பன், வயது 02
346. வை.மேரி கரித்தா, அலப்பன், வயது 33
347. வை.துஷ்யந்தன், அலம்பன், வயது 03
348. வை.லூர்தம்மா, யாழ்ப்பாணம் (பொக்கண) வயது 62
349. ஜி.பரிசினம், குமுழமுனை, வயது 33
350. ஏ.யோசப், பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 66
351. கலையரசி, குமுழமுனை, வயது 01
352. ஜி.விதுஷா, குமுழமுனை, வயது 04
353. எஸ்.சஞ்சிகா, விசுவமடு, வயது 08
354. ரி.கஜந்திரன், விசுவமடு, வயது 16
355. ஆர்.சசிகுமார், விசுவமடு, வயது 35
356. எஸ்.டிம்வில்லா, விசுவமடு, வயது 04
357. எஸ்.பிரதீபா, பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 26
358. வி.முருகேஷ், கனகராயன்குளம், வயது 47
359. எம்.சுனேந்திரன். கனகராயன்குளம், வயது 13
360. வி.யசோதரன், மன்னார், வயது 29
361. எஸ்.கோவிந்தன். மன்னார், வயது 15
362. எம்.கனகாம்பிகை, வட்டக்கச்சி, வயது 16
363. எம்.கேசுதா, வட்டக்கச்சி, வயது 49
364. எஸ்.ஷானி, வட்டக்கச்சி, வயது 12
365. ரி.கண்மணி, மாதலன், வயது 56
366. எம்.மதுரமுத்து, மன்னார், வயது 52
367. எஸ்.ஜொனி, பரப்பக்கந்தன், வயது 08
368. எஸ்.புனிதசீலி, பெரியகுளம், வயது 34
369. எம்.அம்பிகா, வட்டக்கச்சி, வயது 14
370. செல்வரஞ்சினி, முல்லைத்தீவு, வயது 55
371. ஏ.ஞானசேகரம், சாவகச்சேரி, வயது 43
372. ஏ.பாக்கியம், பெரியதம்பனை, வயது 70
373. கே.ஜெயந்தி, தொண்டமனாறு, வயது 44
374. ஏ.புவனேஸ்வரி, கிளிநொச்சி, வயது 45
375. கே.பரமேஸ்வரி, ராமநாதபுரம், வயது 70
376. வி.தமிழினி, சுதந்திரபுரம், வயது 26
377. எஸ்.வேலாயி, வல்லிபுனம், வயது 69
378. தியாகராஜா, இராமநாதபுரம், வயது 31
379. கே.சரோஜினிதேவி, புதுக்குடியிருப்பு, வயது 60
380. ஆர்.கிருஷ்ணபிள்ளை, புதுக்குடியிருப்பு, வயது 71
381. என்.கணேஷலிங்கம், ஒட்டுசுட்டான், வயது 50
382. ஜே.ஜீவனா, பூநகரி, வயது 13
383. யி.யதுர்ஷிகா, வட்டக்கச்சி, வயது 04
384. வி.நாகலட்சுமி, வட்டக்கச்சி, வயது 33
385. யு.சுஜர்ஜன், வட்டக்கச்சி, வயது 02
386. யு.இந்துஜா, வட்டக்கச்சி, வயது 06
387. ஜி.அமிர்தாஞ்சிதம், முல்லைத்தீவு, வயது 45
388. கே.ஜனோஜா, முல்லைத்தீவு, வயது 18
389. ஜி.நிரோஷன், பூநகரி, வயது 12
390. கே.நித்யானந்தன், காரைநகர், வயது 48
391. கே.ஜானகி, உருத்திரபுரம், வயது 65
392. ஏ.மௌலீசன், மட்டுவில், வயது 65
393. எஸ்.குமரன், பூநகரி, வயது 13
394. எம்.மயூரன், யாழ்ப்பாணம், வயது 23
395. பி.உமேசன், மன்னார், வயது 15
396. ராசேந்திரன், மல்லாவி, வயது 75
397. எம்.கீதாகௌரி, வட்டக்கச்சி, வயது 44
398. வி.வள்ளிப்பிள்ளை, பூநகரி, வயது 70
399. சி.தமிழின்பன், பூநகரி, வயது 2.5
400. திருமதி எஸ்.விருஷத்மா, வயது 55
401. ஏ.ராதிகா, சரசாலை, யாழ்ப்பாணம், வயது 20
402. எம்.உதயசிங்கம், ராமநாதபுரம், வயது 33
403. எம்.ஜெயலட்சுமி, கிளிநொச்சி, வயது 65
404. எஸ்.செல்வமணி,உருத்திரபுரம், வயது 50
405. எம்.யோகேஸ்வரி, முல்லைத்தீவு, வயது 58
406. இ.ஜெயதீஸ்வரி, உருத்திரபுரம், வயது 38
407. என்.கிறிஷாந்தன், ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 18
408. எஸ்.கமலாதேவி, ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 54
409. கே.பரிமளாதேவி, அக்கராயன்குளம், வயது 29
410. எஸ்.ஜனகன், உதயநகர், கிளிநொச்சி, வயது 25
411. பெயர் தெரியவில்லை.
412. எஸ்.மனோகரன், கிளிநொச்சி, வயது 24
413. பி.லலிதா, புதுக்குடியிருப்பு, வயது 43
414. எஸ்.சுந்தரலிங்கம், உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 55
415. ஆர்.முருகேசு, வடமராட்சி, யாழ்ப்பாணம், வயது 47
416. எஸ்.குகஇன்பன், பூநகரி, வயது 6
417. எஸ்.வைத்தியநாதன், முல்லைத்தீவு, வயது 80
418. எம்.கந்தசாமி, உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 62
419. கே.விஜிதா, புதுக்குடியிருப்பு, வயது 28
420. எல்.தேவரஜினி, வட்டக்கச்சி, வயது 43
421. எம்.தங்கராசா, மாதலன், வயது 62
422. எல்.புவிலதன், மாதகல், வயது 62
423. எம்.சுபாஹினி, பரந்தன், வயது 05
424. எஸ்.புகசீலன், பூநகரி, வயது 13
425. பி.டுலானி, திருவையாறு, கிளிநொச்சி, வயது 35
426. எம்.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 35
427. ஜே.செபஸ்தியன், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 18
428. பிரான்ஸிஸ், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 70
429. என்.கோகுலன், கிளிநொச்சி, வயது 27
430. பி.சிவகுமார், பூநகரி, வயது 35
431. ஜே.புவனேஸ்வரி, மாதலன், வயது 23
432. எஸ்.ராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், வயது 39
433. கே.சின்னராஜா, சில்லாலை, யாழ்ப்பாணம், வயது 54
434. எஸ்.ரஞ்சனி, பரந்தன்
435. எஸ்.சுஜந்தினி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 29
436. கே.கனகமணி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 64
437. சரிதா, கிளிநொச்சி, வயது 19
438. எஸ்.உதயகுமாரன், கண்டாவளை, வயது 39
439. எம்.செல்லையா, ஆவரங்கால், யாழ்ப்பாணம், வயது 67
440. கே.நடராசா, மட்டுவில், வயது 61

கிறிஸ்தவ மதகுருமார் வருகை தேவாலயத்திற்கு அனுப்பிவைப்பு

mullai.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி விசுவமடு பிரதேசத்தை நோக்கி வந்த கிறிஸ்தவ போதகர் ஒருவரும், எட்டு கன்னியாஸ்திரிகளும் அடங்கலான மதகுருமார் வவுனியா சிதம்பரப்புரத்திலுள்ள தேவாலயத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் இவர்கள் ஒன்பது பேரும் விசுவமடு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளையும், தேவையான வசதிகளையும் வழங்கும் வகையில் வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பணிப்பின் பேரில் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமயத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சகல மரியாதைகளும் இவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்டதாக சுட்டிக் காட்டிய பிரிகேடியர், இவர்கள் அனைவரும் கண்ணன் சர்வதேச திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவ தலைமையகம் மேலும் தகவல் தருகையில்:-

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்கள் ஆரம்பத்தில் பூந்தோட்டம் தேசிய கல்விக் கல்லூரியில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட பின்னர் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பாதுகாப்புப் படை அதிகாரிகளின் இணக்கத்தோடு 9 பேரையும் அவர்களது திருச்சபையை சேர்ந்த ஏனையவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

போதகர் பத்மநாதன் ஜயராஜா, கன்னியாஸ்திரிகளான கனகன் மோகனா, செபமாலை பிரான்ஸிஸ் கம்மா, செபஸ்தியம் பிள்ளை லதா வயலட், கனகசபாபதி சர்மிளாதேவி, அந்தோனி செபமாலை மேரி, அண்ணாமலை மோகனா, ரபெல் ரோஹினி மேரி மற்றும் அந்தோனி லோர்ட் அம்மா ஆகிய ஒன்பது பேரே இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வருகை தந்தவர்களாவர்.

இதேவேளை, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி கண்ணன் திருச்சபை பிரிவின் ஸ்தாபகர் பிதா கலாநிதி அல்பர்ட் வி. ஜெபநாயகம் வன்னி படைத்தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் நடமாடும் பாடசாலைகள் – இடம்பெயர் மாணவர் நலன்கருதி அரசாங்கம் நடவடிக்கை

college1.jpgமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நிவாரணக் கிராமங்களில் மாணவர்களின் நலன் கருதி நடமாடும் பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் ஏற்கனவே செய்து கொடுத்துள்ள போதிலும் அடுத்த வாரம் நடமாடும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் சுமார் 1200 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆசிரியர்களை பயன்படுத்தியே நடமாடும் பாடசாலைகளை நிவாரணக் கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இங்குள்ள மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பொது மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாம்களுக்கும் அவ்வப்போது விஜயம் செய்து தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது.

100 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்; படைகளால் புதுக்குடியிருப்பு சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவில் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவி த்தார்.

இராணுவத்தின் இரண்டு படையணிகளும், மூன்று படைப்பிரிவுகளும் புதுக்குடி யிருப்பை சுற்றிவளைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்றாம் படையணி புதுக்குடியிருப்பின் தெற்காகவும், நான்காம் படையணி தென்மேற்காகவும் முன்னேறிவரும் நிலையில், 53 ஆம் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு நகருக்கு 800 மீற்றர் தொலைவை நெருங்கி விட்டதாகவும் பிரிகேடியிர் நாணயக்கார தெரிவித்தார்.

 புலிகளின் ஆயுத பலம் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை, 20-22 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி பெருந்தொகையான சிவிலியன்கள் வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர், இதுவரை 35,756 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் 3848 பேரும், பெப்ரவரி மாதத்தில் இதுவரை 31,908 பேரும் வருகை தந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 1117 நோயாளர்களும், 494 உதவியாளர்களுமாக 1611 பேர் 5 தடவைகளில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு 1500 தாதியர்களை அவசரமாக அனுப்புவதற்கு அரசு தீர்மானம்

sri-lanka-nurses.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்க ளுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென 1500 மருத்துவத் தாதியரை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.இந்தத் தாதியர் வவுனியாப் பகுதியில் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு தொடராகக் கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

இதேநேரம், கொழும்பிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் எட்டு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவொன்றையும் அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சு முடிவு செய்திருக்கிறது.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து இற்றை வரையும் 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் தப்பி வந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 1 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம், முல்லைத்தீவில் சிக்குண்டிருந்த 1150 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல் மார்க்கமாக அழைத்து வந்துள்ளது. இவர்கள் திருமலை, வவுனியா, பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான ஆரோக்கிய சேவை தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கொழும்பில் அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத் தின் போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை, மன்னார், மதவாச்சி ஆஸ்பத்திரிகளின் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களையும் தாதியரையும் உடனடியாக அவ்வாஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டாக்டர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தங்குமிட மற்றும் உணவுவசதிகளைக் கவனிக்கவென மூன்று அதிகாரிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைச்சு இணைப்பாளராகவும் நியமித்திருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் வாந்தி, வயிற்றோட்டம், வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் தோற்றம் பெறாதிருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

‘முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைந்தன’

red-cross-srilanka.jpgஇலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.

கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருப்போருக்கு உணவு விநியோக நடைமுறையில் மாற்றம்

children-srilanka-02.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தம், சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் இந்திய அமைச்சரின் நிபந்தனையை ஏற்க முடியாது -ஜெயானந்தமூர்த்தி

jeyananthamoorthy-mp.jpgவிடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால், இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களையவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜெயானந்தமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும், ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களையவேண்டுமென அமைச்சர் சிதம்பரம் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப் புலிகளின் ஆயுதத்தைக் களைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக் களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென கூறுவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தாக்குதல் தொடர்கிறது பொதுமக்களுக்கான இழப்பு அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தள செய்திச் சேவைகள் மேலும் கூறுகையில்;

அம்பலன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகள் மீது நேற்று நடத்தப்பட்ட செறிவான ஷெல் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44), சசிகுமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ச் விக்னேஸ்வரன் கஜனி (வயது07), சசிகுமார் தேனிலவன் (வயது05), பாலகுமார் விதுசா (வயது16), தயானந்தா அம்பிகாவதி (வயது 45), தவம் பெனடிற் (வயது 61), சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜின, த.சுபாசிண, தர்மலிங்கம் ஜென, தர்மலிங்கம் அஜந்தன, சு.ஞானாம்பிக, சோமசுந்தரம் விக்னேஸ்வரராஜா, விக்கினேஸ்வரராஜ கரன், அரவிந்தன், கந்தையா முத்துக்குமார, க.நந்தின, சிவச்செல்வன், த.வனஜ, த.அரவிந்தன், த.கிநிச பாலராச, சந்திரகுமார, சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.