கிறிஸ்தவ மதகுருமார் வருகை தேவாலயத்திற்கு அனுப்பிவைப்பு

mullai.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி விசுவமடு பிரதேசத்தை நோக்கி வந்த கிறிஸ்தவ போதகர் ஒருவரும், எட்டு கன்னியாஸ்திரிகளும் அடங்கலான மதகுருமார் வவுனியா சிதம்பரப்புரத்திலுள்ள தேவாலயத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் இவர்கள் ஒன்பது பேரும் விசுவமடு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளையும், தேவையான வசதிகளையும் வழங்கும் வகையில் வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பணிப்பின் பேரில் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமயத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சகல மரியாதைகளும் இவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்டதாக சுட்டிக் காட்டிய பிரிகேடியர், இவர்கள் அனைவரும் கண்ணன் சர்வதேச திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவ தலைமையகம் மேலும் தகவல் தருகையில்:-

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த இவர்கள் ஆரம்பத்தில் பூந்தோட்டம் தேசிய கல்விக் கல்லூரியில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட பின்னர் சிதம்பரபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பாதுகாப்புப் படை அதிகாரிகளின் இணக்கத்தோடு 9 பேரையும் அவர்களது திருச்சபையை சேர்ந்த ஏனையவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

போதகர் பத்மநாதன் ஜயராஜா, கன்னியாஸ்திரிகளான கனகன் மோகனா, செபமாலை பிரான்ஸிஸ் கம்மா, செபஸ்தியம் பிள்ளை லதா வயலட், கனகசபாபதி சர்மிளாதேவி, அந்தோனி செபமாலை மேரி, அண்ணாமலை மோகனா, ரபெல் ரோஹினி மேரி மற்றும் அந்தோனி லோர்ட் அம்மா ஆகிய ஒன்பது பேரே இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வருகை தந்தவர்களாவர்.

இதேவேளை, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி கண்ணன் திருச்சபை பிரிவின் ஸ்தாபகர் பிதா கலாநிதி அல்பர்ட் வி. ஜெபநாயகம் வன்னி படைத்தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • chandran.raja
    chandran.raja

    //புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இவர்கள் ஒன்பது பேரும்//
    பொருளாதார சுகங்களை துறந்தவர்களுக்கே இக்கதியென்றால் சதாரணமக்கள் எம்மாத்திரம். இப்படியான செய்திகளை கேட்ட பின்பும் புலிகளுக்கு குரல் கொடுப்பவர்கள் பைத்தியகாரர்களாகவே இருக்கமுடியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ மதகுருமாரின் செவ்வியையும் பெற்றிருந்தால் ஓரளவாவது களநிலைமைகள் பற்றிய பக்கச் சார்பில்லாத தகவல்களைப் பெற்றிருக்கலாம். முன்பு நலன்புரி நிலையத்திற்கு சென்ற அருட்தந்தை ஜெயநேசன் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வந்த மக்களில் பெருண்பான்மையானவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டே இருக்கின்றார்கள் என்று கூறியுள்ள கருத்து மிகவும் கவலையளிக்கின்றது. அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க ஆவன செய்ய வேண்டுமென்பதை அனைத்த சமயத் தலைவர்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கையாக வைக்க வேண்டும்.

    Reply