பிமல் ரத்நாயக்க

பிமல் ரத்நாயக்க

அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

அல்ஜசீராவுடன் மோதியது ஃபெராரி கார் – ரணிலுக்கு என்.பி.பி பதிலடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஊடகங்களை சந்தித்த வேளையில், நீங்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது ”பெராரி உரிமம் உள்ள ஒருவர், ‘எல்’ போட் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல்ஜசீரா ஊடகத்துக்கு ரணில் வழங்கிய நேர்காணலில் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கும் முகம்கொடுத்திருந்த நிலையில், இது தொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கவலையான செய்தி ஒன்றை தெரிவிப்பதாக குறிப்பிட்டு அல்ஜசீராவுடன் ஃபெராரி கார் ஒன்று மோதியதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்ற முற்பட்டபோது, மிகவும் கவலையான செய்தியுடனேயே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பேச ஆரம்பித்த போது, சபையில் இருந்த சகல எம்.பிக்களும் ஏதோவொரு கவலையான செய்தியொன்றையே அவர் கூறப் போகின்றார் என்று அதிர்ச்சியுடன் அவர் கூறுவதை உன்னிப்பாக கேட்டனர்.

இதன்போது அவர், அண்மையில் இடம்பெற்ற பெரிய வாகன விபத்தொன்று தொடர்பில் இங்கே அறிவிக்க வேண்டியுள்ளது. பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த தினங்களில் பல்வேறு கதைகளை கூறுகின்றார். போக்குவரத்து அமைச்சு மீதான விவாதம் நடக்கும் இந்த நேரத்தில் பெராரி வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவருக்கு எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். அவர் கூறியதை கேட்டு எம்.பிக்கள் சிரித்தனர்.

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

 

வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருட்களையும் கொண்டுவரும் இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிறிதரன் யாழ் சிறையில் கென்று சந்தித்து வந்தார். வவுனியாவில் உள்ள சிறைக்கும் சென்று இ;ந்திய மீனவர்களைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் விடயத்தில் பா உ சிறிதரனோ தமிழ் தேசிய பா உ க்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

மாறாக தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ தேசிய மக்கள் சக்தியின் வழியில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற சபைத் தலைவர் பீமல் ரத்நாயக்காவும் இதே கருத்தை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய நடுவன் அரசும் தமிழக அரசும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போராட்டத்தில் குதித் வடக்கு மீனவர்கள் இதே கோரிக்கையை யாழில் உள்ள இந்திய துணைத்தூதுரகத்திடம் கையளித்தள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் வடக்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில், “இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் சபையில் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம். வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம். அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம். எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதைக்கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்போது பதிலளித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !

கெஹலியவுக்கு ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்த இந்த விஜயத்தில் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !

கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !

 

தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டது முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.

மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது அதிகூடிய மக்கள்தொகையையும் – மிகப்பெரிய வியாபார மையங்களாகவும் காணப்படும்  கொழும்பு மாவட்டத்துக்கு 24 அனுமதிகளும், கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள அதே வேளை இவற்றுக்கு அடுத்தபடியாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்த வரையில் புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் அடிப்படையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதிகளான சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மறந்தும் இதுவரை வாய்திறந்தது கிடையாது. ஏற்கனவே கிளிநொச்சி பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த வகையில் மதுபான சாலைகள் அமைக்கப்படக்கூடாது என்ற தியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைகளுக்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.