கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !
2025 பிப்ரவரி 5 அன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருவரும் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளில் குடியேற்றும் திட்டத்தை அறிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை சர்வதேச நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.
முன்னதாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா அடுத்தடுத்து விலகியதுடன் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.