பாலஸ்தீனப் படுகொலைகளை ஆரம்பிக்க டொனால் ட்ரம் பச்சைக்கொடி காட்டியுள்ளார் ! தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல் !

பாலஸ்தீனப் படுகொலைகளை ஆரம்பிக்க டொனால் ட்ரம் பச்சைக்கொடி காட்டியுள்ளார் ! தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல் !

 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் அதனால் மறுஅறிவித்தல் வரை பணயக் கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகவும் ஹமாஸ் கூறியிருந்த நிலையில்இ காஸாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போர்நிறுத்தத்தை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி காஸாவை சுற்றுலாவிடுதியாக்கும் திட்டத்தை டொனால் டரமினுடைய மருமகன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு போன்றோர் ட்ரம் ஜனாதிபதியாக முன்பே திட்டம் போட்டிருந்தனர். தற்போது அதனை நடைமுறைப்படுத்தப் போவதாக டொனால் ட்ரபை வோஷிங்டன் சென்று சந்தித்த இஸ்ரோலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகுவிடம் டொனால் ட்ரம் பத்திரிகையாளர் முன்னிலையில் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இஸ்ரோல் யுத்த நிறுத்த மீறல்களை ஆரம்பித்து படுகொலைகளையும் முடுக்கி விட்டுள்ளது.

தங்களிடம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தால் தங்களுக்கு எவ்வித பிடியும் இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் ஹமாஸ் மேற்கொண்டு கைதிப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், காஸாவை பொறுப்பேற்பது தொடர்பான தனது தீர்மானம் உறுதியானது. காஸாவிற்கு வெளியே பலஸ்தீன மக்கள் வாழ்வதற்கு வெவ்வேறு இடங்கள் தெரிவு செய்யப்படும். பலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு திரும்ப முடியாது. பாலஸ்தீனர்களை ஜோர்தான்இ எகிப்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாடுகளுக்கான உதவிகளை நிறுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் காஸா தொடர்பான தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அரேபியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் மனித உரிமை குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால் ட்ரம் இன் இந்த முடிவு இஸ்லாமிய நாடுகளுக்கும் மத்திய கடல் பிரதேசத்தில் உள்ள அரபு நாடுகளுக்கும் மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளும் வெட்கித் தலைகுனியும் நிலையை டொனால் ட்ரமின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. ஒரு தெருப்பொறுக்கி உலகத்தை ஆண்டாள் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது உலகமே பார்த்துக்கொண்டுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் ஒரு துரும்பையும் அசைக்காமலே டொனால் ட்ரம் அண்ணாந்து படுத்துக் கொண்டு காறித் துப்புவதைக் காணலாம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *