காசா

காசா

காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரி இலங்கையில் போராட்டம்!

காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் நடந்த மோதலில் 15,000 குழந்தைகள் மற்றும் 7,500 பெண்கள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதில் இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழு, சோசலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் – ஜோ பைடன்

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேலின் அடக்குமுறை – குடிதண்ணீருக்காக திண்டாடும் காசா மக்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள்.

 

தெற்கு காசாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் பலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.

உலக சுகாதார மையம் பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

காசாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த ஒக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது.

அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காசா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றுடன் 100 நாட்களை தொட்ட இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் – இதுவரை 23,708 பேர் வரை பலி !

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட  பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும்  அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும்.

அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர்.

காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க  விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன.

இவ்­வ­ழக்கில்  தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார்.

இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர்.

பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள்   தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர்.

இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார்.

ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார்.

இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர்.

தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார்.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை – ஒரு நாளில் 240 பேர் பலி !

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேற்குக் கரையில், துல்கரேமில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேநேரம் குறித்த 24 மணி நேரத்தில் 382 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

11 வாரங்களுக்கும் மேலாக நடந்துவரும் மோதலில் குறைந்தது 20,915 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த போர் தனது மக்களுக்கு எதிரான கடுமையான குற்றம் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.

 

இதேநேரம் ஹமாஸுடனான மோதல் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் என்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.

 

அதன்படி நேற்று 100 க்கும் மேற்பட்ட தளங்களை தாக்கியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இஸ்ரேலிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் !

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை,எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரைமனித உரிமை கண்காணிப்பாளர் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைதுசெய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது – ஐ.நா

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தினா்.

 

இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச்சென்றனா்.

 

இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

 

காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

மேலும், அங்கு மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயற்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் இராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது.

 

இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

‘குண்டு வீசுவதை நிறுத்துங்கள்!’, ‘குழந்தைகளை கொல்வதை நிறுத்துங்கள்!!’ சனிக்கிழமை காலை லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
இவ்வருடம் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டவழித்து விடப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு, குழந்தைகள் அழிப்பு யுத்தத்திற்கு அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் இராணுவ பொருளாதார பங்களிப்புகளை வழங்கி இந்த இன அழிப்பு குழந்தைகள் அழிப்பு யுத்தத்தின் பங்காளிகளாகி உள்ளனர்.இவற்றைக் கண்டித்து: குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்!! என்று கோரி பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காக் குரல்கொடுக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டம் ஹைப்பாக்கில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.

இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.

இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.