இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனது வெற்றியின் ரகசியம் இதுதான் – தசுன் ஷானக்க

ஒரு தலைவராக ஒரு வீரர் கொடுக்கக்கூடிய சிறந்த விடயம் தன்னம்பிக்கைதான் என இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை கிரிக்கெட் சபையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தலைவராக வீரர்களுக்கு என்னால் வழங்கக்கூடியது தன்னம்பிக்கை. எனது திறமைக்கு ஏற்ப வீரர்களுக்கு அதனை வழங்குவேன் என நினைக்கிறேன். வீரர்கள் தவறிழைத்ததற்காக நான் ஒருபோதும் வருத்தமடைய மாட்டேன். உணர்ச்சிகள் கிரிக்கெட்டில் முக்கியமானவை. அந்த உணர்வுகளை சரியாக நிர்வகித்தால் அணியை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.

இளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும் நம்பிக்கை முக்கியமானதாகும். அணியின் சிரேஷ்ட வீரர்கள் புதிய வீரர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த போட்டியில் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு நாமல் ராஜபக்ஷ தான் காரணம் என்பது வேடிக்கையானது – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை கிரிக்கெட் அணி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. மிக நீண்ட காலமாக பெரிய வெற்றிகள் எவையும் கிடைத்திராத நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்ற நிலையில் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவேளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே தற்போது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வெல்ல காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்ச தான் காரணம் என கூறுவது நகைச்சுவையானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது எனத் தெரிவித்தார்.

உலககிண்ணமே எனது அடுத்த இலக்கு – தசுன் ஷானக

எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே தனது அடுத்த இலக்கு என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் ஆறாவது தடவையாக ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை நேற்று (11) கைப்பற்றியது.

டுபாய் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டடது LPL !

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் !

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ள புதிய சாதனை !

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார்.

ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர் இவராவர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் நடுவராக கடமைாற்றிதை தொடர்ந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.