“நான் ஓர் ஆண்பிள்ளை போல, சிறுவனை போல வாழ ஆசைப்படுகிறேன்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 14 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்ட அறையில் கடிதமொன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமி, ஒரு சிறுவனைப் போல நடந்துகொள்வார் என்றும் அவரது அந்த இயல்பினை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் சிறுமிக்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையிலேயே அவள் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி அக்கடிதத்தை தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் சிறுமி,
நான் ஆணாக, சிறுவனாக வாழவே ஆசைப்படுகிறேன். ஒரு பெண்ணாக வாழ்வதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.
ஒரு பெண்குழந்தையாக பிறந்து வாழ்வது எனக்கு கவலையளிக்கிறது. நான் ஓர் ஆணை போல வாழ விரும்புகின்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை.
தாக்கப்பட்ட சிறுமியாக வாழ்வது குறித்து நான் கவலையடைகிறேன்.
நான் வீட்டிலும் பாடசாலையிலும் ஒரு பெண்பிள்ளை போல வாழவேண்டியுள்ளது. ஒரு ஆண்பிள்ளையாக நான் இல்லாதது எனக்கு கவலையளிக்கிறது என எழுதியுள்ளார்.
அத்தோடு, அச்சிறுமி தான் தொலைக்காட்சிகளில் பார்த்த கொரிய நடிகர் மீது பெரும் விருப்பத்தை கொண்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.