கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை.
பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.
சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர்.
மார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிலர் மதியம் வரை வகுப்புக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், இவ் விவகாரம் வலய கல்விப் பணிமனைக்கு சென்ற பின்னர், அதிகாரிகளின் தலையீட்டையடுத்தே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் எழுதி வந்த சுகயீன விடுப்பு கடிதத்தின் காரணம் தவறென்றும் குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தபவரின் பெயரை குறிப்பிட்டு அவரால் சுற்றுலா அழைத்துச் சென்றதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கடிதம் எழுதி தருமாறும் அதிபர் அழுத்தம் கொடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.