தரம் 4இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவனிடம் ஏ4 தாளை கொண்டு வருமாறு கூறப்பட்டுள்ளது. எனினும் அதனை கொண்டு வராததால் அதிபா் மாணவனின் முதுகில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் மாணவனிடம் வினவியுள்ளனா். இதன்போது அதிபா் தாக்கியமை தொடா்பில் பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளான்.
பின்னா் மாணவன் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதனையடுத்து பெற்றோர் சம்பவம் தொடா்பில் பங்கம பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த அதிபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.