தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(CWI- Socialist Party)

International Day of Action – Protest at INDIA HOUSE,
Aldwych,
London,
WC2B 4NA –

Wednesday 8 April 4 – 5.30 pm

சோசலிஸ்ட் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • GNANI
    GNANI

    we are wasting our time i think, we can do something better than this. do exta hours and make money.when this collection boys comes give them a donation,in the name of the war.they can buy BMW for them.

    all the innocent tamils die on war.and this silly sods making a money simply say we the saviours.

    Reply
  • மாயா
    மாயா

    உங்கள் போராட்டம் உண்மையானது. உங்கள் எண்ணமும் நியாயமானது.
    அது அங்கு வாழும் தமிழருக்கு என்றால்…
    புலிகளுக்காக என்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.
    இதுகுறித்த பேட்டியைக் கேட்டேன். உங்கள் நோக்கம் நல்லது.
    புலிகளிடமும் இதையே முன்வைப்பதாக அறிவியுங்கள்.
    அப்பாவி தமிழரை விடுவிக்க வேண்டும் புலிகள் எனவும் கோஸமிடுங்கள்.

    உங்கள் பேட்டியை இங்கேதான் கேட்டேன்:
    http://www.radio.ajeevan.com/

    Reply
  • சோமசுந்தரம்
    சோமசுந்தரம்

    இந்திய முதலாலித்துவத்திற்கு எதிரான இந்த போராட்டத்திற்கு “இறந்தகாலத்தில் ஏதாவது முன்மாதிரியை அடையாளம் காட்ட முடியுமா?”. “தமிழ் தேசிய குறுங்குழு வாதத்துடன் இதன் எல்லை முடிவடையாது” என்ற உத்திரவாதத்தை, ஏற்ப்பாட்டாளர்கள் தரமுடியுமா?. யராவது சொறிவதற்கு முதுகு கொடுத்தால் சொரிந்து விடுவதா!!. –சோசியலிஸ்ட் சோமசுந்தரம்

    Reply