கோகோ-கோலா போத்தல்களை தள்ளி வைத்துவிட்டு தண்ணீரை தெரிவு செய்த ரொனால்டோ – கோகோ-கோலாவுக்கு 4 பில்லியன் நட்டமாம் !

பாட்டிலை தூக்கி காமித்து ஒரே நாளில் கோகோ கோலாவிற்கு பெரிய ஆப்பு வைத்த  ரொனால்டோ
அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன்  மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ  நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாக ஆரம்பித்துள்ள இந்த வீடியோவால் அவருடைய ரசிகர்கள் கோகோ-கோலாவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். அவருடைய அந்த சின்ன அசைவு காரணமாக கோகோ-கோலா கம்பெனிக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *