அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இலங்கை அரசாங்கம் !

அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் 2014 இல் மத்திய வங்கி ஊடாக அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு பணம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது என தெரிவித்துள்ள வோல்ஸ்ரீட் ஜேர்னல் அந்த நபர் சி.ஐ.ஏ.யின்யின் உளவாளி எனவும் தெரிவித்துள்ளது.
இமாட் ஜூபாரி என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு புலனாய்வு தகவல்களை வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்தவர் என சட்ட ஆவணங்கள் மற்றும் அவரை நன்கறிந்தவர்களை மேற்கோள் காட்டி வோல் ஸ்ரீட் ஜேர்னலின் பத்திரிகையாளர் பைரன் டாவேர் தெரிவித்துள்ளார்.
இமாட் ஜூபாரியின் செயற்பாடுகள் குறித்து சில குற்றச்சாட்டுகள், அவருடன் இணைந்து பணியாற்றிய சி.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்புடையவை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருமுறை அவர் இலங்கையின் சார்பான திட்டமொன்றினை முன்னெடுப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இதுவே பின்னர் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டாக மாறியுள்ளது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சார்பில் அந்த திட்டத்தை பொறுப்பேற்ற பின்னர் ஜூபேரி கடலோர கண்காணிப்பு அமைப்புமுறையொன்றை கொள்வனவு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார், அதனை பயன்படுத்தி இந்து சமுத்திரத்தின் பெரும்பகுதியை கண்காணிக்க முடியும் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஜூபேரியிடம் வழங்கிய அதன் பொதுமக்களின் வரிப்பணத்தில் 87 வீதத்தினை அவர் தனது தனிப்பட்ட தேவைகளிற்காக செலவிட்டுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடு ஒன்றிடமிருந்து பணம் உட்பட நன்மைகளை பெற்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 12 வருடசிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *