“ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் காணப்படும் வீடியோ இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை எடுக்கப்பட்டதல்ல உலகின் பல நாடுகளில் எடுக்கப்பட்டது” என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் தொடர்பான காணொளி ஒன்றினைமனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் வெளியிட்டிருந்ததது . இது தொடர்பாக கூறும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் விடயங்கள் இலங்கையில் இடம்பெற்றவையல்ல வெவ்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டவை என்பதை இலங்கை ஏற்கனவே நிரூபித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் அரசியல் நோக்கங்களை கொண்டவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் முன்வைக்கும் கேள்விகள் உள்நோக்கங்களை கொண்டவை என்பதால் இராஜாதந்திர அளவில் பதிலளிக்கவேண்டிய கேள்விகளை இலங்கை தெரிவு செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.