யாழ்.மாநகர முதல்வராக தெரிவாகியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தனக்கான சம்பளத்தினை மக்களின் பொது நலத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்போவதாகவும் அறிவித்திருந்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தற்போது முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினையும் தான் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
மணிவண்ணனுக்கு முன்னர் யாழ்.மாநகர முதல்வராகப் பதவி வகித்த இம்மானுவேல் ஆர்னோல்ட் தனக்கு அதி சொகுசு ரக வாகனமே வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் பயன்பத்திய சொகுசுரக வாகனத்தை கோரிப் பெற்றுப் பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.