“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொவிட் சடலங்கள் எரிக்கப்படுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன The Hindu” பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் தமது உறவினர்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்ய முடியும் என கூறுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் உலக சுகாதார அமைப்புடன் உடன்படுகிறேன்.
சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமமாகப் பகிரப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.