தற்போதைய யுத்தத்தின் முன்னரங்க நிலையாக இருந்த விஸ்வமடு பகுதியில் உள்ள கல்மடு குளக்கட்டு இன்று (ஜனவரி 24) காலை குண்டு வைத்து தகர்க்ப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலால் குளக்கட்டு உடைக்கப்பட்டு விஸ்வமடு, தர்மபுரம், இராமநாதபுரம் பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. ஏ35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் கல்மடு நெத்தலியாறு பகுதிகளில் நேற்று முதல் (ஜனவரி 23) விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் பாரிய மோதல் நடைபெற்று வந்தது. அதன் ஒரு கட்டமாக இராணுவ முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கல்மடுக் குளக்கட்டை குண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.
பாரிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டுடைத்து பாய்ந்த வெள்ளத்தால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டதாகவும் இராணுவத்தினருக்கெ இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மினி சுனாமியில் இடம்பெயராத தமிழ் மக்களும் அகப்பட்டுக் கொண்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள மனிதாபிமானமற்ற செயல் இதுவென்றும் அவர்கள் உயிர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையும் வழங்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் பற்றி உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
ello
1400 படைகளின் உடல்கள் மீட்கபட்டது.
PRO-TAMIL
யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள மனிதாபிமானமற்ற செயல் இதுவென்றும் அவர்கள் உயிர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையும் வழங்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்….
– ஈவிரக்கமின்றி ஒரு வருடத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை மக்களை உறங்கவிடாது நிம்மதியின்றி செய்த படுகொலைகள் மட்டும் வன்னியில் 100கடந்து விட்டது, 350க்குமேல் படுகாயம். இதில் கொலைகாரர்கள் மனிதாபிமானம் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
maruthu
புலிகள் எப்பவுமே மக்களைப்பற்றியோ தாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்பதையும் யோசிக்கும் இயக்கமல்ல. ஏற்கனவே கடல் நீர் உட்புகும்படியான கிடங்குகள் வெட்டப்பட்டு பரந்தன் -கிளிநொச்சியை நோக்கி கடல் நீர் உட்புகுந்து விட்டது தம்மை மட்டுமல்ல இனிவரும் சந்ததி உழுது வாழ முடியாமலும் செய்து விட்டுத்தான் இந்தப் புலிகள் தாமும் அழியப் போகிறார்கள். ………. கூட்டம்.
பார்த்திபன்
கல்மடுக்குளத்தை புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகள் வைத்து தகர்துள்ளனர். இதனால் ஏ-35 வீதியின் ஒரு பகுதியும் பரந்தன்- பூநகரி பிரதான பாதை மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கிருந்த தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க சில புலிகள் பல்லாயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கதையை கட்டிவிட்டுள்ளனர். ஆனால் புலிகளின் ஏடான தமிழ்நெற்றோ இவ்விடயம் தொடர்பாக வாயே திறக்கவில்லை. ஆனால் புலிகள் வழமைபோல் மக்களை ஏமாற்ற கதை கட்டி விடுவதிலேயே குறியாக உள்ளனர். எனி வழமைபோல் மக்கள் இழப்புக்கள் வெளிவந்ததும், புலிகள் குளக்கட்டை இராணுவமே உடைத்து விட்டு தம்மில் பழி போட்டதாக பூச் சுற்றுவார்கள். அந்தப் பூவை ஆசையயாக வாங்கி எல்லோரும் காதில் வைத்து அழகு பார்க்கலாம்.
Mr. Cool
//1400 படைகளின் உடல்கள் மீட்கபட்டது- ello //
இதுவரை இது விடயமாக எந்த விதமான உத்தியோகபூர்வமான தகவல்களும் எல். ரீ. ரீ. ஈ யின் உத்தியோகபூர்வமான ஊடகங்களில் வெளிவரவில்லை. எல். ரீ. ரீ. ஈ யின் சார்பு ஊடகங்களில் மாத்திரமே வெளிவந்துள்ளன. எல். ரீ. ரீ. ஈ யின் சார்பு ஊடகங்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியுமா???
பார்த்திபன்
இந்த இணைப்பில் குள உடைப்பின் காணொளி உள்ளது. இதைப் பார்க்கும் போது உண்மை புரியும். இராணுவத்திற்கு இந்த உடைப்பு பேரிழப்பை ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்திய செய்தியே. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
http://uk.youtube.com/watch?v=e9K6bV2herg&feature=related
julian
அண்மையில் பிபிசி யின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருந்த ரி வை ஒ இளைஞர் ஒருவர் இந்த சம்பவம் நடக்கும் என்று உறுதிபட சொன்னார். இவர் இதை சொல்லும்போது லண்டனில் உள்ள புலிகளக்கு நிதி சேகரிக்கும் புலிகளின் முக்கியமான வேலைகள் செய்பவர்கள், இது பற்றி நிறையவே கதைத்துள்ளதாயும் அவர் அங்கு கதைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தை ரி வை ஒ – பிரி எப் ம் இணைந்து நடாத்தியது.
thurai
புலிகள் வன்னியைப் திரும்ப பிடிக்கும்போது பாயும் தண்ணியை உறிஞ்சிக்குடிப்பார்களா?
துரை
palli
இது ஒரு சரியான செயலாக படவில்லை. காரணம் புலிகள் ஏற்க்கனவே பயங்கரவாதிகள் பட்டியலில் முன்னிடம் வகிக்கிறாகள். எந்த ஒரு நாட்டிலும் இயற்க்கையுடன் விளையாடுவது தவறான செயலாகுமென எழுதபடாத சட்டம் உண்டு என புலி அறியும். இருப்பினும் இந்த செயலை ஏன் புலி செய்தது என்பது தெரியவில்லை. சீப்பை எடுத்து ஒழித்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்கும் புத்தியில்லாத பாமரன் போன்ற செயலாகவே இது உள்ளது. இதனால் எதிர் காலத்தில் தமிழரின் விவசாயம் பாதிக்கபடுமே தவிர
தற்போது ராணுவத்துக்கு எந்த கெடுதலும் இல்லை. இதை விட கேவலம் இதை வீர விளையாட்டாக புலம் பெயர் புண்ணாக்குகள் கொண்டாடியது. 1983ல் இரணைமடுவை உடைக்க ராணுவம் ஆகயத்தால் முற்பட்டது. அது நடந்தால் என்ன விளைவு வன்னிக்கு
வருமென ஒரு விவசாய தமிழ்மகன் சொன்னதை கேட்டு அதை தடுக்க அனைத்து அமைப்புகளும் வேறுபாடு இன்றி செயல்பட்டதை இத்தருணத்தில் நினைவு கொள்ள வேண்டிஉள்ளது. எது எப்படியோ இழப்பு தமிழருக்கே என்பது திண்ணம்.
பல்லி.
Raikumar
துவக்கு வைத்திருக்கிறதுகள் அங்கே. காசு வைத்திருக்கிறதுகள் இங்கே. இரண்டு பக்கமும் சேர்நது தமிழ்மக்களை ஒரு வழிபண்ணுவார்கள்.
padamman
இது தான் கடைசி கட்டம் இனிமேல் தங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்துதான் இந்த குளத்தை உடைத்துள்ளர்கள் இன்னும் இரண்டு குளம் இருக்கின்றது அதையும் உடைத்தால் நிச்சயம் தமிழ்ஈழம் கிடைக்கும். நம்புங்கள் புலம்பெயர்ந்தர்களே நாளை தமிழ்ஈழம் கிடைக்கும்.
santhanam
விடுதலை போரட்டம் அகிம்சையாகி ஆயுதமாகி அது சேடம் இழுக்க இப்போ பஞ்சபூதத்திடம் போரடுகிறோம். அதற்கு உலகநியதி இடம் கொடாது
அருட்செல்வன்
முல்லைத்தீவு, கல்மடுக்குளம் அணைக் கட்டை நேற்று சனிக்கிழமை காலை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்ததில் மனிதப் பெருநாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்பட்ட பெருநாசம் என்னவென பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்காத போதும் இது குறித்து மேலும் கூறுகையில்;
விசுவமடுப் பகுதியில் பல முனைகளிலும் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் நேற்றுக் காலை கல்மடுக் குளம் அணைக்கட்டைத் தகர்த்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் உயிரைச் சிறிதும் பொருட்படுத்தாது புலிகள் மேற்கொண்ட அப்பட்டமானதொரு மனிதாபிமானமற்ற ஒரு செயலே இதுவாகும். புலிகளின் இந்தச் செயலை உலகளாவிய ரீதியில் கண்டிக்க வேண்டுமென பாதுகாப்பு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் (ஏ35) இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடுப் பகுதியில் ஒரு பிரிவிலேயே புலிகள் மிகவும் சக்தி வாய்ந்த வெடி மருந்தைப் பயன்படுத்தி இந்தக் குளக் கட்டைத் தகர்த்துள்ளனர். கல்மடுவுக்கு வடகிழக்கேயும் நெத்தலியாறு பகுதியிலும் ஏற்பட்ட பலத்த தோல்விகளைத் தாங்க முடியாத புலிகள் இவ்வாறானதொரு செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குளக்கட்டு உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முல்லைத்தீவில் சிறிய நிலப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டிருக்கையில் பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் இரணைமடுக்குளத்தை உடைத்தும் இதே போன்றதொரு அவலத்தை ஏற்படுத்த புலிகள் முயற்சித்த போதும் அது கைகூடவில்லை.
கல்மடுக்குளமானது 5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவானது. இங்கிருந்து ஐநூறு ஏக்கர் வயலுக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
kanapathi
தோல்வியின் வெளிப்பாடு
அன்று கிளிநொச்சி தண்ணீர் தாங்கி..
இன்று கல்மடு குளக்கட்டு..
நாளை..!
ello
மாவிலாறு முதல் கல்மடுவரை – ஆலயம் முதல் உண்டியல்வரை புலிக்கு சரிவராத ஒரு செயல்.
mr.Cool
மாவிலாற்றுத் தண்ணீரைப் பூட்டியதால் ஆரம்பித்த சண்டை கல்மடுக்குளத் தண்ணீரை பாய விட்டதனால் முடிவடையுமா?
SUDA
அவர்களுக்கே ஓடி ஒளிய இடமில்லை. அதுக்குள்ள மற்றவர்களுக்கென்ன குளம் நிலம் வேண்டிக்கிடக்கு? அவையள் (புலிகள்) இல்லாத பூமியில் யாருக்கும் இடம் தேவையில்ல. வாழ்க புலிகள்! வளர்க அவர் தம் சேவை!!
இதுவும் ஒரு யுத்த தந்திரோபாயம்தான். நம்புங்கள் புலம்பெயர் வாழ் தமிழர்களே. கண்ணீர் வெள்ளம் இல்லாட்டா தண்ணீர் வெள்ளம் என்ற லேபலோட உண்டியல் கொண்டு வருவார்கள். அள்ளி நிரப்பி ஜமாய்ங்கோ. கண்டிப்பா தமிழீழம் பொறக்கும்.
PRO-TAMIL
புலிகள் மிகவும் சக்தி வாய்ந்த வெடி மருந்தைப் பயன்படுத்தி இந்தக் குளக் கட்டைத் தகர்த்துள்ளனர்,/- அரசாங்கம் தமிழ் மக்கள் மீது வீசிய யப்பானில் போட்ட அணுகுண்டிலும் பார்க்க பன்மடங்கு சிறிலங்கா தமிழினத்தை அழிக்க பாவித்ததை கோத்தபாயவே தொன் கணக்கு சொன்னவர். அதிலும் பார்க்க கடுகளவு வெடிமருந்தே இதற்கு பாவிக்கப்பட்டிருக்கும். புலிகள் ஆக்கிரமித்து வரும் இராணுவத்துக்கு எதிர்பாராத தாக்குதலை இரத்தம் சிந்தாமல் சிதைத்துள்ளனர். இக்குளக்கட்டு உடைக்கப்பட்டதால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசுதான் முண்டியடித்து மனிதாபிமானம் மக்கள் என புதுகரிசனை கொண்டாடுது. இதற்கு பின்னரும் நேற்றும் 12பேர் கொலை, 87பேர் காயம்…..
பார்த்திபன்
நேற்று இந்த புரளிகளைப் பரப்புவதில் GTV யும் பிரான்சிலிருந்து இயங்கும் தமிழ் ஒலி (Tamil Olli) வானொலி மற்றும் கனடாவிலிருந்து இயங்கும் CTR 24 ஆகிய ஊடகங்களே முன்னின்றன. இதன் மூலம் இவர்களின் செய்திகளிலுள்ள நம்பகத்தன்மையை நேற்று அனைத்து மக்களும் உணரக் கூடியதாக இருந்தது.
chandran.raja
பதின்நான்கு ஆண்டுகள் பங்கர் அமைத்து கொடிகட்டி கப்பம் வாங்கி ஆட்சி புரிந்த வன்னிதேசம். இனி தங்களுக்கு உதவாத போது கல்மடுகுளம் மக்களுக்கு என்ன தேவை?. விவசாயம் என்ன? கால்நடைகள் என்ன? போ! -புலிகளின்அகராதி-