பிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவரும் பதவிக்கு வேறு ஒருவர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு எந்த அவசியமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடந்தேறியுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரப்ப மொய்லி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் பொறுப்புகளைக் கவனிக்க பிரணாப் முகர்ஜி செயல் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மொய்லி ,இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றார்.
பிரதமர் நாட்டில் இல்லாதபோது அவருடைய பொறுப்புகளை மூத்த அமைச்சர் கவனிப்பதுதான் மரபாக உள்ளது.பிரதமர் முழு உடல் நலம் பெற்று இரண்டு வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என்று மொய்லி மேலும் தெரிவித்தார்.