பருத் தித்துறை கடற் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் படகுகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர நேற்று முன்தினம் தெரிவித்தார். இவர்கள் (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறி னார்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களை கைது செய் துள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக் காக பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி பிரவேசித்ததன் காரணமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இவர்களின் கைது குறித்து இந்திய தூதரகத்துக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.