பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்கள் தகுதி !

இலங்கையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தத் தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்தநிலையில், 2020 ஒக்டோபர் 28ஆம் திகதி கம்பஹா விக்கிர மாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தைப் பூரணமான பல்கலைக்கழகம் என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட் டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *