இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சரத்து ஒன்றிற்கான வாக்கெடுப்பு – 20ஆவது திருத்தச் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது இரட்டைப்பிரஜாவுரிமை !

20ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை குறித்த 17 ஆவது சரத்து தொடர்பில் எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு தனியான வாக்கெடுப்பொன்றினையும் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சபாநாயகரின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட தனியான வாக்கெடுப்பின் 17 ஆவது சரத்து  தொடர்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64  வாக்குகளும் கிடைத்தன.

இதற்கமைய, 17 ஆவது சரத்து 92 மேலதிக வாக்குகளினால்  திருத்தங்கள் இன்றி 20ஆவது திருத்தச் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 213 ஆகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சரத்து ஒன்றிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *