அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவின் உயர்மட்ட குழுவினர் அண்மையில் இலங்கை வருகை தந்திருந்ததுடன் இலங்கையினுடைய பொருளாதார மேம்பாட்டுக்காக கணிசமான தொகையினை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அரசியல் அரங்கினை பொறுத்தவரையில் அமெரிக்கா – சீனா இடையேயான பகை பெரிய பேசுபொருளாக மாறிவருகின்ற நிலையில் இலங்கை மீதமான இந்த இரு நாடுகளின் கவனமும் அரசியல் அவதானிகளால் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.