யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வீதிகள் பலநோக்கு கூட்டுறவுசங்கக் கிளைகள், பொதுக்கட்டடங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள் திருத்துதல் முதலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் மீட்சித்திட்டத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.