வவுனியா சேமமடு மக்கள் குடியிருப்புக்களில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருகின்றன. குடியிருப்புக்களில் புகுந்து பயன்தரு மரங்களை அழித்து வருவதோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இக்காட்டு யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இப்பகுதியில் இக்காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவத்தினரும் இணைந்து இந்த யானைகளை நெடுங்கேணியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நந்தா
தனது பிரதேசங்களை மனிதர் ஆக்கிரமித்தால் யானை என்ன செய்யும்?