தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Comments

 • santhanam
  santhanam

  நாலு சுவரிலிருந்து ஒருகாலத்தில் சித்திரம்தான் வரைந்தார்கள் இவ்வளவு காலம் மெளனிகளாக…விட்டு இப்ப ஏன் விமர்சனம் இது செத்த பிணத்தின் வாழ்வியலை….. விமர்சிக்கவா நக்கீரா.

  Reply
 • Norway Nackeera
  Norway Nackeera

  விமர்சியுங்கள் சந்தானம். எது செத்தபிணத்தில் வாழ்வியல்? பிணத்துக்கு வாழ்வு இருக்க இயலாது. வாழ்வு அழிந்தால் தானே பிணம். பின் பிணத்துக்கு எப்படி வாழ்வும்? வாழ்வியலும்? எல்லாவற்றையும் அரசியலுக்குள் போட்டுக் குழப்பாமல் இருந்தால் நல்லது. செவிடர்களின் செவிகளுக்கு எல்லாமே மெளனம்தானே.

  Reply
 • Thaksan
  Thaksan

  எல்லாவற்றையும் கடந்து உள்ளே செல்பவனே கடவுள். கட+உள். முள்ளிவாய்க்காலை கடக்க தெரியாத முண்டம் எல்லாம் கடவுள் ஆக முடியாது. மனித உள்ளங்களை கடந்து வென்றிருந்தால் உனது வலது கையே உனக்கு துரோகியாகவும் எதிரியாகவும் மாறியிருக்காது. உன்னை அடையாயம் காட்டி உனது மரணத்தை உறுதிப்படுத்த நீ துரோகியென்றவனே தேவைப்பட்டான். உன் உயிரற்ற உடலத்திற்கு முன்னால் உள்மனதில் அஞ்சலித்த ஒரேயொரு தமிழன் அவனே. எத்தனையோ தமிழ்த்தாய்களின் சாபம் பலித்ததுவிட்டது. உன் சாவிற்கு உரிமைகோரி ஒரு துளி கண்ணீரைத்தானும் விட உலகில் யாருமற்ற அநாதையாய் உன் வாழ்வு முடிந்தது. இது கொடுமை தான். தமிழ்ச் சாதி தனக்கு லாபமில்லாதவரை எதனையும் கணக்கிலெடுக்காது. குறிப்பாக யாழ்ப்பாணிகள்.

  Reply
 • தமிழில் செய்திகள்
  தமிழில் செய்திகள்

  http://tamilseithi.wordpress.com/2009/12/06/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf-2009/
  […] உங்கள் தரிசனத்துக்காக ஒரு தரிசனம்.   http://thesamnet.co.uk/?p=18015#comment-157748 […]

  Reply
 • பல்லி
  பல்லி

  கலர் அல்லா புறாக்களும்;
  அழகான பனை மரமும்;
  அறியாத நாடுதன்னில்;
  கவிதையின் நாயகனோ;

  இரு தரப்பு நிலமைகளையும்;
  இதமாய் சொல்லுவதால்;
  இவரது கருத்துக்களோ;
  இடம் மாற முயலாது;

  தமிழரது தலவனாய்;
  தானே தான் என்று;
  தனக்கென சிலரையோ,
  தளபதிகளாக்கி கொண்டு;

  சமாதான வேளையிலும்;
  சமாதி சிந்தனையில்;
  சர்க்கார் நடத்தியதால்;
  சாவுற்றோர் கணக்கேது;

  சூசைக்கு கடல்பரப்பு;
  சூட்ச்சிக்கு பொட்டரென;
  சூதாட்டம் செய்தவர் தான்:
  சூட்ச்சியால் போனாரே,

  யாரையும் விடவில்லை,
  யாருக்கும் உரிமை இல்லை;
  யாருக்கும் தெரியாது;
  யாருக்கு ஈழம் என்று,

  மக்களை வேலியாக்கி;
  மாணவரை இரையாக்கி;
  மனசார புலம் பெயரோ
  மன்னவனை கடவுளாக்கி;

  இல்லை இன்று தலைவனென,
  இன்று வரை நம்பவில்லை,
  இலை என சொல்பவர்களோ;
  இவர்கள் தான் துரோகிகளாம்;

  பொல்லாத போராட்டம்;
  பொறுமை இழந்த காலநிலை,
  போனால் போகட்டும்,
  பொறுமையாய் சிந்திப்போம்;

  நட்புடன் பல்லி;

  Reply
 • santhanam
  santhanam

  /சூசைக்கு கடல்பரப்பு;
  சூட்ச்சிக்கு பொட்டரென்
  சூதாட்டம் செய்தவர் தான்:
  சூட்ச்சியால் போனாரே,

  மக்களை வேலியாக்கி;
  மாணவரை இரையாக்கி;
  மனசார புலம் பெயரோ
  மன்னவனை கடவுளாக்கி//

  சபாஷ் பல்லி மிக அற்புதமான கவிதை

  Reply
 • பல்லி
  பல்லி

  சந்தானம் உங்கள் பாராட்டுக்கு நன்றி;
  இது பல்லிக்கு கவிதை, ஆனால் காணாமல் போனோரின் ஒப்பாரியும் இதுதானே?

  Reply
 • Uma
  Uma

  கட்டுரைதான் கைவராதென
  கட்டியம்தான் கூறினாலும்
  பட்டுபட்டென தெறித்துவிழுகிறதே
  பல்லியின் கவிதைகளிப்போ

  நட்பான நக்கீராவுக்கு
  நல்லதொரு போட்டிபோலும்
  எவ்வாறாயினும் இருவருக்கும்
  எனதினிய வாழ்த்துக்கள்

  நமக்குள் ஓர்மாற்றம்
  நடப்பது எப்போதென
  நாம் காத்திருப்பதுபோல்
  நமக்கும் கட்டுரைகளினிடையே
  கவிதைகளும் தேவைபோலும்

  Reply
 • Norway Nackeera
  Norway Nackeera

  ஒப்பாரி வசனநடைக் கவிதையாக மட்டுமல்ல சிலவேளை மரபுக் கவிதைகளையே வென்று நிற்கும். காரணம் பாமரமக்களின் மனதில் நின்று நிஜமாகப் பரிணமிப்பது ஒப்பாரி நாட்டுப்படால் பள்ளுப்பாடல் போன்றனவாகும். பல்லி கவிதையோ ஒப்பாரியோ உணர்வுகளின் உண்மை வெளிப்பாடு என்பது போற்றலுக்குரியதே.
  /கலர் அல்லா புறாக்களும்;
  அழகான பனை மரமும்;
  அறியாத நாடுதன்னில்;
  கவிதையின் நாயகனோ/ இப்பாட்டுக்கு எதிர்பாடுப் பாட ஆசையாக இருக்கிறது.

  பனிப்பூவெறியும் வான்வெளியும்
  கலர்முடியில் கோதையரும்
  பணம்பிடித்து நாட்டினிலே
  மனம்பிடித்துப் பார்த்தாலும்
  பனிக்காட்டுத் பூந்தளிரில்
  எம்மிதயம் துளிர்காது
  உறைபனியில் விறைக்காது.
  தமிழ்பாவெடுத்துப் படிசமைத்தால்
  பனிக்காடே உருமையா.
  துருவமே துவளுமையா
  தமிழெடுத்து அழகுபார்க்க
  கண்ணாடி போதாதே
  (கண்ணில் நாடி போதாது)

  நாயகன் என்றே
  நா நயம் இன்றி
  நாயகன் ஆக்கி-புலத்தால்
  நாடி நாடிப் பிடித்து
  நந்திக்கடலினிலே
  நாறிக்கிடந்ததையா
  நானிலம் ஒன்று.
  நாலுபோர் இன்றி

  நானிலன் நாயகன்
  பல்லியே நாயகன்

  கவிதையின் கருப்பொருள்
  கவிதாவி விட்டிடுமோ
  நிதர்சனம் சுமந்துவரும்
  தரிசனங்கள் கவிதையன்றோ (கவி-ஆண்குரங்கு)

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  ஆயிரம் கவிதைப் பூக்கள் மலரட்டும்
  ஒன்றுடன் ஒன்று முட்டி மோதட்டும்
  கருக்கட்டும் புதிய விதை
  உருவாகும் புதிய பூக்கள்…

  Reply
 • Kusumpu
  Kusumpu

  வாழ்வியல் கவிதையை போரியலுக்கும் பொருத்துவது நன்றாக இருக்கிறது

  Reply
 • Norway Nackeera
  Norway Nackeera

  சோதிலிங்கம்!
  கருவின் விதையே கவிதை
  கருவிதை கவிதை
  கருவைத் தை
  கவிதையாகும்.
  கவி தை
  காவியமாகும்:

  கவிகொண்டு கதைசொல்லலே காவியம்

  Reply
 • susi
  susi

  புலியும்,தலைவரும் இல்லாமல் போய் எவ்வளவு காலம் போனாலும் நாங்கள் இன்னும் அவர்களை பற்றி தான் எழுதுவோம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //நட்பான நக்கீராவுக்கு
  நல்லதொரு போட்டிபோலும்
  எவ்வாறாயினும் இருவருக்கும்
  எனதினிய வாழ்த்துக்கள்//உமா.

  இது போட்டியல்ல நீங்கள் சொன்னது போல் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும்போது எமது எலாதனம் புரிகிறது; அதையும் மீறி சிலர் கட்டுரை எழுதுகிறார்கள்; அதுக்கு பின்னோட்டமும் எழுதுகிறோம்; அதுக்கிடையில் அன்றாட வாழ்வை கவிதையாக்கி நக்கீரன் கொண்டு வருகிறார், அதிலும் எமது கருத்தை கவிதைபோல் சொல்லுகிறோம், நக்கீரன் தளத்தில் அவரது கவிதைகளை போய் பார்க்கவும்; இருப்பினும் உங்கள் கருத்தே எனதும்; இடை இடையே நக்கீரன் வரவேண்டும், கவிதையுடன் வர வேண்டும்; நன்றி உமா;

  //சோதிலிங்கம்!
  கருவின் விதையே கவிதை
  கருவிதை கவிதை//

  அளுத்தமாய் சொல்லுவதால்;
  அது ஒரு அறிக்கை;
  கருத்துக்களை தேடவோ;
  கட்டுரைகள் எழுதிடலாம்;
  பின்னோட்டம் என்றாலே;
  ஆராட்ச்சி அனல் பறக்கும்;
  பிறர் கதையை சொல்வதனால்;
  நம் கதைக்கு வரவேற்ப்பு;
  மனம் இறங்கி கிறுக்குவதால்;
  கரு இங்கே கவிதையாகும்:

  நாயகன் என்பதனால்,
  நக்கீரா பயம் எதற்க்கு,
  நடு கடலை நினைத்து விட்டால்;
  நமக்கும் அது பாடம்தானே;

  தரிசன நிகழ்வுகளை;
  நிதர்சனமாய் சொல்லுவதால்,
  பலர் மனதும் அலைபாயும்;
  நக்கீரன் கவிமீது;

  தளமது தேசமோ;
  நம்தேசம் நிலைசொல்ல;
  பலருக்கு தளமுண்டு:
  தளத்துக்கு நிலையில்லை;

  பல்லியை தண்டிக்கும்;
  குசும்புவும் இங்குவந்து;
  பக்குவமாய் சொல்லுவதனால்;
  நக்கீரா நன்றியப்பா,,

  பல்லியே:

  Reply
 • சந்தனம்
  சந்தனம்

  அரசியலில் கலக்காதே என்றீர் நக்கீரா ஆனால் குசும்பு வந்து அங்கே அதில் முன்றையும் கலக்கிறார்…..

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சுசி! நீங்கள் எழுதியது நியாயமானதே. ஆனால் புலிகளும் தலைவரும் எம்மக்களுக்கும் உலகில் வாழ் எம்மினத்திற்கும் செய்த செயல்களை இலகுவில் மறக்க இயலாது. ஒரு சூனியப்பிரதேசத்துக்குள்; இருண்ட அண்டவெளிக்குள் எம்மக்களைத் தள்ளிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். எப்படி மறக்கச் சொல்கிறீர்கள்? மக்கள் பெற்ற காயங்களோ: விழுந்த உதிரத்தின் வடுக்களோ என்னும் இன்னும் காயவில்லை. புலிகள் தினவெடுத்து என்நண்பர்களை தோழர்களை கொன்று குவித்தபோது அழுத கண்ணீர் இன்றும் உப்புக்கரிக்கிறது சுசி. தமிழ்மக்கள் அழுது அழுது உப்பளமாகத்தான் கிடக்கின்றன எம்முகங்கள்.”பிரபாகரன் சொல்வாராம் தாம் வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் என்று” அவர் பாணியிலேயே கதைக்க முயற்சியாதீர்கள். ஒரு சம்பவமே ஒரு இலட்சம் மக்களின் அழிவு என்றால் சரித்திரம் எப்படி அமைந்திருக்கும் எண்ணிப்பாருங்கள் சுசி? இப்படிப்பட்ட தரித்திரம் பிடித்த ஒரு சரித்திரம் வேண்டாம்.தமிழன் உலகில் ஒருவன் இருக்கும் வரை புலிகள் என்றும் பிரபாகரன் என்றும் கறை இருந்து கொண்டே இருக்கும். ஏன் கிட்லரை யாரும் இப்போது கதைப்பதில்லையா. பாடப்புத்தகங்களாக இருக்கின்றனவே. தமிழ்மக்களின் ஏகபோக உரிமை தாங்கள் தான் என்று கண்டநிண்டபடி சுட்டுத்தள்ளிய புலிகள் போட்டார்கள்; சரி மறக்கிறோம் என்சகோதரங்களைத் திருப்பித்தாருங்கள் அடியோடே மறக்கிறோம். நான் இங்கு என்சகோதரம் என்று கருதுவது எம்மை நம்பி எம்கீழ்பயிற்சி எடுத்து ஒரோ கோப்பையில் உணவுண்டு தமிழ்இனத்தை மனதில் சுமந்த புலிகளால் கொல்லப்பட்ட அனைவரையும்தான் சொல்கிறேன். திருப்பித்தாருங்கள் இந்த நிமிடமே மறக்கிறோம்

  Reply
 • பல்லி
  பல்லி

  குசும்பு கலப்பதனால்;
  சந்தானம் குழம்புவதா;
  எல்லாமே சகசம்தான்
  நாம் நாமாய் இருந்து விட்டால்:

  Reply
 • Nackeera
  Nackeera

  சுசி- கவிதை தத்துவார்த்தம் அதை தொடர்பு படுத்துவது பின்-நோட்டம் விடும் பின்னோட்டக்காரர்கள்.

  சந்தனம்- உண்மைதான் தத்துவார்த்த> குறியீட்டுக்கவிதைகளை பலவிடயங்களுக்குப் பொருத்திப்பார்க்கலாம். அதற்கேற்றால் போல் பொருள்தரும். தேசம் கூடுதலாக அரசியலைப் பேசுவதால் அரசியலுடன் தொடர்புபடுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் எழுதிய கவிதை பொதுப்படையானது. நீங்களும் விரும்பினால் எழுதுங்கள். நான் அரசியலை மட்டும் கருதி எழுதவில்லை சந்தனம்.

  Reply
 • Nackeera
  Nackeera

  Palli_ //நக்கீரன் தளத்தில் அவரது கவிதைகளை போய் பார்க்கவும்//
  /பக்குவமாய் சொல்லுவதனால்;
  நன்றியப்பா/

  நன்றிக்கு நன்றி சொல்லி பல்லியை வாழ்த்திடுவோம்: பல்லியின் பரிந்துரையில் என்பக்கத்தில் இருப்பு இது.

  http://nackeeraa.wordpress.com/

  only poems
  http://nackeeraa.blogg.no/

  Reply
 • Nada
  Nada

  susi on December 7, 2009 11:42 am //புலியும்,தலைவரும் இல்லாமல் போய் எவ்வளவு காலம் போனாலும் நாங்கள் இன்னும் அவர்களை பற்றி தான் எழுதுவோம்//

  1958 இல் இருந்து 1983 வரைக்கும் இன்னும் பேசுவோம்;
  1984 இல் இருந்து 2009 மே பதினெட்டு வரைக்கும் மறப்போம்;
  தம்பியையும் மறப்போம் ஒரு கெட்ட கனவாக!

  Reply
 • Thaksan
  Thaksan

  குசும்புவின் ஆதங்கமே எனதும். ஆனாலும் புலிகளென தம்மை ஐந்தறிவு மிருகமாக அடையாளங்காட்டி நின்றவர்களிடம் மனித விடுதலையை எதிர்பார்த்தோமென எந்த மனிதனும் தன்னை தாழ்த்திக் கொள்ளமாட்டான். தெரிந்தோ தெரியாமலோ தன்னை புலியாக அடையாளப்படுத்தியபோதே அது உளவியல் ரீதியாகவே அவர்களை மிருகங்களாக மாற்றிவிடும். மிருகங்கள் மனிதர்களை பலியெடுக்க ஆரம்பிக்கும்போது அதனை அடக்கிவைக்க எமது சமூகம் கிளர்ந்தெழவில்லை. பகிரங்கமாக கொல்லப்பட்ட சுந்தரம்(1982) தொடங்கி இறுதியாக கேதீஸ் வரை(2007)பல்லாயிரக்கணக்கான சகோதர படுகொலைகளை கண்டும் காணாமலும் இன்னுமொரு படி மேலே சென்று சுகித்திருந்த எளிய சமூககூட்டத்தின் பிரதிநிகளே நாங்கள். காசியானந்தனின் கவிதை வரிகளில் சொல்வதானால் “நாயே! உனக்கும் ஒரு நாடா? பேயாய் இருந்து தொலைந்தாயா?”.

  Reply
 • Thaksan
  Thaksan

  கனவென மறக்க
  நாமொன்றும் கால்ச் செருப்பை தொலைத்தவர்களல்லர்!
  காலங்காலமாய் வாழ்ந்த வாழிடங்களை>
  பனங்காட்டிடை ஒற்றையடி பாதை தடங்களை>
  கூடிக் கூழ் குடித்த குடும்ப உறவுகளை>
  பச்சை வயல்வெளிகளில் பரிணமதித்த காதல்களை>
  கட்டிக் கலவி கொண்டு ஈன்றெடுத்த கண்மணிகளை>
  இன்னுமின்னுமெத்தனையோ இழந்துவிட்டு …..
  அடையா நெடுங் கதவாய் அகலத்திறந்திருக்கும்
  அகதி முகாம்களில் அநாதரவாய் கிடக்கின்றோம்!
  ஆனாலும்…..
  நாளைய பொழுது நமக்காகவும் விடியலாம் என்ற
  நம்பிக்கை மட்டும் சாகவில்லை
  “நாமார்க்கும் குடியல்லோம்”!!!

  Reply
 • susi
  susi

  குசும்பு சகோதர படுகொலை எல்லா இயக்கங்களூம் தான் செய்தது. என்ன புலி தனது பலத்தை காட்ட கொஞ்சம் அதிகமாகவே செய்தது. அதற்காக காலம் முழுவதும் அதையே கதைத்துக் கொண்டுயிருப்பதில் ஒரு பிரயோசன்மும் இல்லை அதை விடுத்து எதிர் காலத்தில் இது[சகோதர படுகொலை] நடக்காமல் இருப்பதற்காக எதாவது ஆக்க பூர்வமாக எழுதுங்கள். எப்படி எல்லாரும் ஒன்றூபடலாம் என எழுதுங்கள். புலி உங்கள் நண்பர்களை கொண்டு விட்டார்கள் என நீங்கள் கவலைப்படுகின்ற போல தானே அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களும், ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்ட புலிகளும் கவலைப்படுவார்கள்… இப்படி கவலைப் படுவதாலும் மாறி மாறி பழி வாங்குவதாலும் பிரச்சனை தீர்ந்து விடுமா? இவ்வளவு காலமும் புலி அழிந்து போக வேண்டும் என நினைத்த உங்கள் ஆசை ந்டந்து விட்டது இனிமேலாவது புலியை தவித்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாருங்கள்.இப்ப தானே புலியை குற்றம் சாட்ட இயலாது புலி தடுத்து விட்டது அது தான் செய்யவில்லை என நன்றி.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நடா-//1958 இல் இருந்து 1983 வரைக்கும் இன்னும் பேசுவோம்; 1984 இல் இருந்து 2009 மே பதினெட்டு வரைக்கும் மறப்போம்; தம்பியையும் மறப்போம் ஒரு கெட்ட கனவாக!//
  58அல்ல 48ல் இருந்து 83வரை பேசலாம் இக்காலங்கள் தான் எம் அரசியல் தலைவர்கள் தமிழ்மக்களின் தலையில் வைத்தார்கள் ஆப்பு பேசுவோம் துவேசத்தைவளர்க்காத ஒரு பல்லினச் சமூகத்தை. ஆனாலும் தம்பியையும் புலிகளைப்பும் எப்படி மறக்கச் சொல்கிறீர்கள். கனவாக மறக்கலாம் அதற்கு அது நித்திரையில் நடந்தது இல்லையே நிஜமாக நடந்தவை. இரத்தவாடை போகவில்லை விழுந்த உதிரம் காயவில்லை. கண்ணீர்வடிந்த கன்னத்தில் இன்னும் உப்புப் பூக்கவில்லை. எப்படி மறப்பது. எம்முடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த தோழனை வானில் கட்டி வெறுமுடம்பு தேய தெருத்தெருவாய் இழுத்துப்போனார்களே புலிகள் மறக்கச் சொல்கிறீர்களா? புலிகள் செய்ததை மறப்பதனால் புதியவர்களும் அதையே செய்வார்கள். எம்மினத்தையே இருளுக்குள் தள்ளிவிட்ட மாபாவிகள் இந்ததான் இந்த மாதுரோகிகள்(மாவீரர்கள் அல்ல. இத்தத் துரோகத்தால் தான் இவனை தன்சகோதரம் என்றோ என்பிள்ளை என்றோ உரிமைகோர ஒருவன் கூட வரவில்லை. அண்ணன் என்றும் தம்பி என்றும் சூரிதேவன் முருகன் என்றெல்லாம் கூப்பிட்டுக் கும்பிட்ட கூட்டத்தில் ஒருவானவது பிரபாகரனின் உடலை உரிமைகோரினானா? மாவீரர் தினம் மண்ணாங்கட்டி. காடாத்துக்குக் கூட சாம்பலை இல்லை. இப்ப எதற்கு மாவீரர் தினம். கூடிக் கும்மாளம் அடிக்கவா?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்தனம்- எனக்கு அரசியலைத்தவிர எனக்கு வேறு தெரியாது. நான் அரசியல்தான் வாசிப்பது உண்டு. பல்லி மாதிரி கவிதையும் எழுதத்தெரியாது. அப்போ என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நன்றி தக்சன். சுசி-எல்லோரும் சகோதரப்படுகொலை செய்தவர்கள் என்பதற்காக அவர்களை மன்னிக்கப்போவதில்லை. அதைப்பற்றி இன்றும் கதைக்கிறோம். ஆனால் மற்றை இயக்கங்களைப் பொறுத்தவரை தமிழ்மக்களை இருட்டில் தள்ளி எதிரியின் கால்களை நக்கவிட்டது புலிகளா மற்றவர்களா? இன்று சில்லறை சில்லறையாக இயக்கங்கள் அமைப்புக்கள் என்று ஆரம்பித்து சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்காமல். இன்று நாம் செய்யவேண்டியது பாதிக்கப்பட்டமக்கள் தென்பாகிறமாதிரி அவர்களுக்கா அவர்கள் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதே அறிவாற்றல் ஆகும்: தென்பு பெற்ற மக்கள் தானாகவே தினவெடுப்பார்கள். இப்போ நாம் குடம்பியாக எம்மை எம்மக்களை தயார்படுத்தும் காலமே தவிர விசும்புக்கு வேட்டையாடும் காலம் அல்ல. புலிகள் போய்விட்டனர் என்று பல சில்லறை சில்லறை இயக்கங்கள் உருவாகலாம். இது எம்மக்கள் மேல் தேவையற்ற பாரத்தைத் திணிப்பதாகும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  குசும்பு அரசியல் பலருக்கு தெரியாது; அது உங்களுக்கு தெரிந்திருப்பதே மிக பெரிய விடயம், நான் எழுதுவது கவிதையா,? அல்லது அரசியலா?
  அல்லது அடாவடிதனமா? எதுவும் எனக்கு தெரியாது, மனதில் பட்டதை எழுதுவேன், மறு பின்னோட்டம் அது என்ன என சொல்வார்கள், இப்படிபட்ட பல்லியே கவலை கொள்ளாத போது; மிக முக்கியமான அங்கமான அரசியல் தெரிந்த குசும்பு போங்க குசும்பு வெக்கமாய் இருக்கு;
  //என்பேனாவால் எப்படிச் சிரிக்க முடியும்?
  என் பேனாவின் அழுகையை எப்படி நிறுத்த முடியும்?
  என் மூச்சு நின்றபோதும்
  என்பேனா அழுதுகொண்டிருக்கும்//
  (நக்கீரனிடம் திருடியது)//

  முப்பது வருடமாய்;
  கிட்டனும் பொட்டனும்;
  கிறுக்கு தனத்தோடு;
  மூளைகெட்ட சிலதுகளும்;
  முளுநேர வேலையாய்;
  செய்த கொலைவெறியதனை;
  மறக்கதான் வேண்டுமா;
  மறக்கதான் முடியுமா;

  அழகான பனைமரங்கள்;
  அடிக்கடி நினைவுவரும்;
  இதைதானே செல்லப்பா,
  இசையோடு முழங்கினாரு;
  மரமதனை நினைவுவைத்து;
  மனிதத்தையே மறந்துவிட்ட;
  மாவீரன் மகிமைகளை;
  மறக்கதான் முடியுமா;
  மறக்கதான் வேண்டுமா.

  தமிழனது வரலாறு;
  தடம் புரண்ட இரத்தாறு;
  தமிழருக்கோ சில பக்கம்;
  புலியதுக்கோ பல பக்கம்;
  இதை கூட தமிழர்கள்
  மறக்கதான் வேண்டுமா;
  மறக்கதான் முடியுமா;

  வட்டுகோட்டை தீர்மானம்;
  வரலாறு நமக்கில்லை;
  வல்வெட்டிதுறை தந்த
  வன்முறையும் எமக்குதான்;
  நாடுகடந்த ரமில் ஈலம்;
  நடு தெருவில் தமிழர்கள்,
  நாம் இதனை சொல்லுவதால்,
  நமக்கேனோ சொல்லெறிகள்;
  மறக்கதான் வேண்டுமா;
  மறக்கதான் முடியுமா;

  சிரியாத தலமையும்;
  சிரித்த்கபடி அரசியலும்
  சிந்திக்காத பாலாவும்;
  சில்லறைக்காய் புலம்பெயரும்:
  மறக்க முடியவில்லை;
  மன்னிக்க தெரியவில்லை;

  சுசிக்காக பல்லி,

  Reply
 • Nackeera
  Nackeera

  நான் இந்தக் கவிதை மூலம் சமூகத்துக்கும் சொல்லும் செய்தி என்னவெனில்: நாம் பிறந்தநாள் முதல் சாகும் வரையும் எமது சுயமுகத்தை என்றும் பார்க்க இயலாது. எனது சொந்த முகத்தையே பார்க்க முடியாத நாம் மற்றவர்கள் முகங்களை வர்ணிக்கிறோம். உட்கருத்து என்ன வெனில் ஒவ்வொரு தனிமனிதனின் முகங்களும் சேர்ந்தது தான் சமூகத்தின் முகம். ஒரு தனிமனிதன் தனக்குரியவல்ல சமூகத்துக்குரியவனே. கண்ணாடி காட்டும் விம்பத்தை வைத்துத்தான் நான் நானென உறுதிசெய்கிறேன். ஆனால் உன் உள்ளிருப்பது இன்னொன்றல்லவா. நாம் எமது முகத்தை அலங்காரம் செய்வதே எமக்காக அல்ல. மற்றவர்கள் பார்ப்பதற்கும் நாம் விரும்பும் ஒருத்திக்கு நாம் அழகாய் இருப்பதற்கே. நாம் எமது முகத்தை 5நிமிடம் அலங்காரம் செய்வதே நாள்பூரா யாரோ பார்பதற்கே.

  கண்ணாடியூடாக மனிதத்தன்மையையும் வாழ்வியலையும் சொல்ல விளைந்தேன். நாம் ஒரு செய்கையை கண்ணாடி முன்னால் நின்று செய்தால் பிரதிவிம்பம் நாம் செய்ததையே திருப்பிச் செய்யும். அடித்தால் திருப்பி அடிக்கும். அப்படியானால் நாம் எமக்கு எதிரிதானே. சரியாக வாழ்வைக் கிரகித்தால் நாம் செய்த ஒவ்வொரு செயலும்தான் எமக்குப் பிரச்சனையாக இருந்தது இருக்கிறது. நாம் யார் என்பது எமது அகத்தில் இருக்கிறதே தவிர புறத்தில் அல்ல. அகம் சரியாக இருக்க வேண்டும் என்றால் சுயவிமர்சனம் தேவை. அதாவது என்பிழைகளை உணர்ந்து திருந்துதல் வேண்டும். திருந்திய ஒவ்வொரு மனிதனும் கடவுள் தானே. கடவுள் என்பது கட+உள் என்பதாம். கடந்து உள்ளே இருப்பவர் கடவுள். நாம் சுயவிமர்சனங்களூடு எம்மைக்கடந்து எம் உள்ளே போய் எம்மைத் தேடிக்கண்டு கொண்டால் கடவுளைக் கண்டதற்குச் சமனாகும். இப்போ நீதான் கடவுள். இக்கவிதையில் சுருக்கம் இது; இதை இன்னும் விரிவாக விளங்கப்படுத்தலாம் பலகருதியல்கள் உள்ளே உள்ளன. சரி இதை புலிகளுக்கு ஒப்பிடுவோமே. மக்களின் கருத்துகளுக்குக் காது கொடுத்து சுயவிமர்சனம் செய்து திருந்தியிருந்தால் புலிகளுக்கு இன்நிலை வந்திருக்காது.விமர்சிக்க முடியாதவாறு மக்களின் வாய்கள் துர்ப்பாக்கியமாக துப்பாக்கிகளால் பொத்தப்பட்டு விட்டனவே. பின்நோட்டக்காரர்கள் அரசியலுக்குள் இழுத்துப்போனாலும் கவிதை பலகோணங்களில் பாக்கக் கூடியதாக உள்ளது.

  Reply
 • Nackeera
  Nackeera

  பல்லி: கவிதை நன்றாக இருக்கிறது. கவிதையின் சீர் என்று சொல்லப்படுவது சிறப்பா அமைந்திருக்கிறது. தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

  Reply
 • Nackeera
  Nackeera

  //என்பேனாவால் எப்படிச் சிரிக்க முடியும்?
  என் பேனாவின் அழுகையை எப்படி நிறுத்த முடியும்?
  என் மூச்சு நின்றபோதும்
  என்பேனா அழுதுகொண்டிருக்கும்//
  (நக்கீரனிடம் திருடியது)//
  என்கவிதைகள் யார் யார் இதயங்களைத் தொட்டதோ இல்லையோ என் கவிதைகளைத் தேடி எடுத்து அதை பதிவுறும் வண்ணம் இங்கே எழுதும் பல்லியை மனமார மகிழ்ந்து வாழ்த்தாமல் இருக்க முடியாது. நன்றி பல்லி. என்கவிதையை வைத்தே என்னைக் குழப்பி விட்டீர்கள் பல்லி. இது என் பழைய கவிதையின் (முடியா? மூடியா?) சில வரிகளல்லவோ.

  Reply
 • susi
  susi

  குசும்பு நீங்களே உங்கள் கடைசி வரிகளீல் எழுதி விட்டீர்கள் புலி இல்லா விட்டால் பல,பல சின்ன இயக்கங்கள் உருவாகும் என அதை நீங்கள் விரும்பவில்லை அதை போல தான் அந்தக் காலத்தில் பல இயக்கங்கள் உருவாகியதை புலிகள் விரும்பவில்லை.புலிகள் ஒன்றும் வானத்தில்
  இருந்து குதிக்கவில்லை அவர்களூம் சாதரண மனிதர்கள் தான்.

  பல்லி கவிதை நல்லாத் தான் இருக்குது பொருள் தான் சரியில்லை. கிட்டு என்ன 30 வருடமாக புலியில் இருந்தாரா? பொட்டன் நேரடியாய் கொலை செய்ததை கண்ணாலே பார்த்தீங்களா? புலியை கட்டாயம் விமர்சனம் செய்ய வேண்டும் ஆனால் அதற்கு முன்னால் உங்களை விமர்சனம் செய்யுங்கள். இப்ப தான் புலி இல்லையே உங்களை பழி வாங்க?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //புலி இல்லா விட்டால் பலபல சின்ன இயக்கங்கள் உருவாகும் என அதை நீங்கள் விரும்பவில்லை அதை போல தான் அந்தக் காலத்தில் பல இயக்கங்கள் உருவாகியதை புலிகள் விரும்பவில்லை//-சுசி நான் எப்போ சொன்னேன் நான் விருப்பவில்லை என்று. சிறு சிறு இயக்கங்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்பது எனது கருத்தல்ல வரலாறுகளும் தத்துவவியலும் சொல்லும் உண்மை. புலிகள் விரும்பவில்லை என்றால் கொலைதான் முடிவா? இப்படி ஒவ்வோரு மனிதனும் சிந்தித்தால் நீங்களும் நானும் இப்போ கதைத்துக்கொண்டு இருக்க இயலாது. என்று புலிகள் மற்றய இயக்கங்களுடன் பேச்சுவாத்தைகளூடு சமரசப்பட்டுப் போனார்கள். ஈரோசைச் சொல்லப்போகிறீர்களா. அதுவும் உடைந்துதான் பாலகுமார் அங்கு சென்றார். தயவு செய்து கொலைகளை முதன்மைப்படுத்தாதீர்கள்.

  //பொட்டன் நேரடியாய் கொலை செய்ததை கண்ணாலே பார்த்தீங்களா?// -என்று பல்லிக்கு எழுதியிருந்தீர்கள். உங்களது சொந்தப் பெயர்தான் சுசி என்பதை யார் கண்ணால் கண்டது? இதற்கெல்லாம் சாட்சி கொண்டுதிரிய ஏலாது சுசி. பொட்டரின் தலைமையில் அவரின் கட்டளையில் பலதமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் பத்திரிகைகளில் வந்ததே. கொலைசெய்பவனை விட கொலைசெய்ய கட்டளையிட்டவனே குற்றவாளி. எந்தச் சட்டத்திலும் இதற்குத் தண்டனை உண்டு.

  Reply
 • பல்லி
  பல்லி

  கவிதை நல்லாத் தான் இருக்குது;
  நக்கீரனும் சொன்னாரே;;

  பொருள் தான் சரியில்லை;
  பார்வையில் தவறுண்டு;;

  கிட்டு என்ன 30 வருடமாகவா;
  சுசி வயதென்ன இருபத்திரண்டுதானா;;

  பொட்டன் நேரடியாய் கொலை ;
  இல்லையே முதுகில்தான் குத்துவார்;;

  கண்ணாலே பார்த்தீங்களா;
  என் கண்ணாலே பார்த்தேனே;;

  விமர்சனம் செய்ய வேண்டும்;
  புலிகளை கட்டாயம்;;

  அதற்கு முன்னால் உங்களை;
  செய்து விட்டோம் மனிதரென;;

  விமர்சனம் செய்யுங்கள்;
  கவிதையின் கரு இதுதான்;;

  புலி இல்லையே உங்களை;
  அதுதானோ சுசி கவலை;;

  உங்களை பழி வாங்க;
  மீண்டும் ஒரு சுடுகாடா??

  பல்லி;

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நக்கீரரே- நீங்கள் உங்கள் கருத்தை எழுதிவிட்டீர். அரசியல் என்பது வாழ்வுடன் ஒன்றாயிருக்கிறது. அரசியல் தவிர்த்துப் பார்க்கும் நிலை இன்றில்லை. ஆதால் தான் அரசியல் கண்ணோட்டத்தில் உங்கள் கவிதைகளைப் பார்த்தோம். கவிதை எழுதத்தெரியாத என்னைக் கவிதையில்தான் பதில் சொல்லவேண்டும் என்று கேட்காதீர்கள்

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சுசி: கிட்டிலர் யாரையுமே கொல்லவில்லைத் தெரியுமா? கொன்றால் கூடச்சாட்சியில்லை. யார் சொன்னது யார் கண்டது கிட்டிலர்தான் யூதர்களைக் கொன்றது என்று. பாட்டன் அல்லது கொப்பாட்டன் யுதர் தெரியுமா? நாம் ஒரு புதிய சரித்திரம் எழுதுவோம் பல்லி 4மில்லியன் அதாவது ஈழத்தமிழர் சனத்தொகையை விட மிகஅதிகமான யூதர்களைக் கொன்று குவித்தது கிட்லரே அல்ல. கிட்லர் வந்து யாரை நேரே சுட்டார் சொல்லுங்கள்.

  Reply
 • susi
  susi

  குசும்பு நான் உங்களுக்கு எழுதிய முதலாவது பதிவில் குறிப்பிட்டேன் புலி தான் அதிக சகோதர படுகொலை செய்தது என நான் இங்கு புலி குற்றம் செய்யவில்லை என சொல்லவில்லை ஆனால் நீங்கள்,பல்லி உட்பட‌ எல்லோரும் புலியை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் ஏன் ஏனைய இயக்கங்களையும்,அர‌சையும் விமர்சியுங்கள் ஏன் அவர்கள் குற்றமே செய்யவில்லையா? புலிகளின் தலைவராக இருந்தவர் பிர‌பாகர‌ன் அப்படியிருக்கையில் ஏன் பொட்டுவை மட்டும் கொலை வெறியன் என்கிறீர்கள் அப்படியாயின் தலைவருக்கு தெரியாமலா பொட்டு கொலை செய்ய உத்தர‌வு போட்ட‌வர்?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சுசி! நீங்கள் சொல்வதை நான் பலதடவை செய்திருக்கிறேன். அரசைமட்டுமல்ல மாற்றுக்கருத்தாளர்களை: கருணா பிள்ளையானை கழகத்தாரை. தமிழித்துக்குத் துரோகம் செய்தவர்கள் அனைவரும் விமர்சிக்கப்படவேண்டியவர்களே. நல்லது சுசி எம்மினத்துக்குக்கு எவன் துரோகம் விளைவிக்கிறானோ அவனை என்மால் முடித்தவதை திருத்த முயல்போம் முடியாவிடில் இனம்காட்டுவோம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இதை புலி பலமாக இருக்கும் போதே நான் மட்டுமல்ல பல்லியும் செய்திருப்பார் என்று நம்புகிறேன். புலியை படுமோசமாக விமர்சித்தோம். புலிகளைத்திருந்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒருகாலகட்டத்தில் மாற்றுக் கருத்துகளுக்குச் செவி பொடுத்தார்கள் பின் பழையபடியே குப்பைக்குள் விழுந்து விட்டார்கள்

  Reply
 • பல்லி
  பல்லி

  ://பல்லி உட்பட‌ எல்லோரும் புலியை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் //
  சுசி கவனிக்கவும் பல்லியின் கடந்த கால பின்னோட்டங்களை;

  ஆனால் ஏன் பொட்டர் கிட்டு? இதுக்காக ஒரு உன்மை சம்பவத்தை உங்களுக்காக நக்கீரன் கோபித்த்காலும் பரவாயில்லை. ஒப்பாரியாகவோ அல்லது புலம்பலாகவோ தருகிறேன், பலருக்கு தெரிந்த சம்பவம்,புரியாவிட்டால் பின்பு பின்னோட்டமாக தருகிறேன்;

  அம்மா;
  பெற்றஎன் கண் முன்னே;
  பிள்ளை அவன் முகத்தினிலே;
  பொல்லாதோர் மிரிக்கையிலே;
  தாய் நான் புலம்பிநின்றேன்;

  சாப்பிட்ட குறையினிலே;
  துலைவார்கள் கொன்றார்கள்;
  பசியவனோ தாங்கமாட்டான்;
  பாவி நான் என்ன செய்வேன்;

  அப்பா;
  மகனே நீ அழுதுவிடு;
  இதயமோ வெடித்துவிடும்;
  தம்பியவன் வரமாட்டான்;
  இனி எங்கு காண்போமோ;

  அக்கா,
  அம்மா நீ அழ வேண்டாம்;
  தம்பியவன் வந்திடுவான்;
  தங்கையோ துடிக்கின்றாள்;
  எப்படினான் சொல்லுவது;

  அண்ணன்;
  அண்ணாவே காப்பாத்து;
  அலறினான் என் தம்பி,
  அண்ணா அண்ணா என
  அடங்கு மட்டும் அலறினானே;

  தங்கை,
  அண்ணா நீ வந்துவிடு;
  அம்மா திட்ட மாடார்,
  அப்பா தூங்கியதும்;
  பின் கதவை திறந்திருப்பேன்;

  தம்பி;
  எல்லோரும் அழுகிறனரே;
  எதுக்காக அழுகிறனரோ;
  சின்னண்ணன் எக்கப்பா;
  சைக்கிள்தான் நிற்க்குதப்பா;

  நண்பி,
  வரும் காலம் நீயென்றாய்;
  புன்னைகத்தேன் சம்மதமாய்;
  தொலைத்தனரே நம்வாழ்வை;
  துடிக்கின்றேன் மனதுக்குள்;

  நண்பன்;
  என் கண்கள் கலங்கவில்லை;
  உன் கண்ணை பார்பதனால்;
  உன் கண்கள் மூடவில்லை;
  உறவுகளை நீ தேடுவதனால்;

  பல்லி;
  புரட்ச்சி கவியுமல்ல;
  புண்ணாக்கு கதையும் இல்லை;
  பல குடும்ப வடுக்கள்தான்;
  பல்லியின் கிறுக்கல்கள்;

  பல்லி,
  (பல்லியின் கிராமத்து உன்மை கதை)

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //பல்லியின் கிராமத்து உன்மை கதை //
  பல்லி,
  இது பல்லியின் கிராமத்து உண்மைக்கதை மட்டுமல்ல, பல கிராமத்து உண்மைக் கதை. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அந்த வலி புரியும்……

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி எனக்குக் கவிதை எழுத வராது என்பதால் போட்டுத் தாழ்கிறிர் போல் இருக்கிறது. நடத்தும் நடத்தும் உமது நாடகத்தை. முறையான பண்டிதர்மார் இல்லை எண்டதாலை பல்லி வாங்குகிறார்.

  Reply