‘அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதில்கள் சாதகமாக அமைந்தது’ புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம்

நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.

இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.

இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் – Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று  தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் – மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி – அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.

பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.

இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • விசுவன்
    விசுவன்

    புலத்தில் இன்னமும் புலிக்கதை கூறும் புண்ணாக்குகள் கண்களில் இவர்கள் இனி துரோகிகள்! வரவேற்க வேண்டிய இந்த பயணம் இனியாவது இலங்கையில் சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ ஒரு அத்திவாரமாக அமைய வேண்டும்! இன்றைய தேவை நாடுகடந்த அரசோ அல்லது காடு கடந்த சுடலையோ அல்ல! ! இனவாத அரசியலை சிங்களவர்களுடன் தமிழர்களும் கைவிட்டாலே இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைப்பபெறும்! பொருளாதாரத்தில் புலத்தில் உச்ச நிலையில் உள்ளவர்கள் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இனியாவது முன்வரவேண்டும்! வெறுமனே சிங்களவனுடன் வாழ முடியாது ஆண்ட பரம்பரை என்று பழைய புராணத்தை விடுத்து சகல இனங்களும் ஒன்றாக வாழ தங்கள் தங்கள் வரட்டு கெளரவங்களை துறக்கும் நேரமிது என்பதை இந்த குழு உணர்த்தியுள்ளது!

    Reply
  • Saturn
    Saturn

    இது உண்மையான, சுத்தமான, புடம்போட்ட புலி எதிற்பு வியாபாரிகள், விஞ்சானிகள், அறிவாளிகள், விமர்சகர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. புலி அம்பலப்படுவதட்காக வாழ்நாளை செலவழித்தும் இறுதியில் அரசாங்கம் புலி வரவேற்பில் முன்னிகின்றது.
    உடனடியாக இந்த நிலைமை மாற வலி ர்கேட வேண்டும். அல்லாவிடில் அரசாங்கம் எங்களை புலி எண்டு சொல்லிவிடும். முப்பது வருடம் அம்பலப்படுத்தினாலும் ஒன்றும் பெற முடியாது

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளுக்கு இனி இதைத் தவிர வேறு வழியில்லை. அரசும் இவர்களது வாலை நறுக்காமல் , உள்ளே (வரவிட்டு)அடித்துக் கொண்டு வாழ விடுகிறது. இவர்களது மக்களுக்கு , இவர்களே வாழ்வு கொடுக்க வைக்க முனைகிறது. மோட்டுச் சிங்களவன் எனச் சொன்ன தமிழினம், இன்று மொக்கு தமிழினமாக நிற்கிறது. எல்லாம் நம் தமிழ் தலைவர்கள் காட்டிய வழிகாட்டல். அவர்களையும் அழித்து , தமிழ் மக்களையும் அழித்தார்கள். இது சரியில்லைதான். இருந்தாலும் பரவாயில்லை. துரோகிகளானுலும், நீங்கள் திறந்த வெளிச் சிறைகளுக்கு கொண்டு வந்த மக்களுக்கு வாழ்வழியுங்கள். அது பாராட்டக் கூடியது.

    Reply
  • Sivakumar
    Sivakumar

    இனவாத அரசியலை சிங்களவர்களுடன் தமிழர்களும் கைவிட்டாலே இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைப்பபெறும்!

    Reply
  • BC
    BC

    //மோட்டுச் சிங்களவன் எனச் சொன்ன தமிழினம் இன்று மொக்கு தமிழினமாக நிற்கிறது. எல்லாம் நம் தமிழ் தலைவர்கள் காட்டிய வழிகாட்டல். //
    உண்மை தான்.ஆனாலும் இதுவரை போல் அல்லாது முதல் தடவையாக தமிழர்களுக்கு நன்மை தரும் முடிவை எடுத்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழுவை பாராட்டுவோம்.

    Reply
  • Sivakumar
    Sivakumar

    விசுவன் on November 14, 2009 9:25 am
    இனவாத அரசியலை சிங்களவர்களுடன் தமிழர்களும் கைவிட்டாலே இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைப்பபெறும்!

    இன்றய தேவை இதுதான்.
    மாற்றங்கள் வரவேற்கப்பட வேடியவை.
    நாட்டில் வாழும் மக்களுக்கு மறு வாழ்வும் முன்னேற்றமும் அளிக்கும் வகையில் கட்டுரைகளையும் கருத்துகளையும் முன்வைப்போம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலத்தில்லிருந்து போனவர்களின் பின்புலன்களை ஆய்வுக்குட்படுத்துங்கள். அவர்கள் யார்? யாருடன் கடந்தகாலத்தில் உறவை வைத்திருந்தார்கள் என்பதை கண்டு கொள்ளுங்கள். இப்ப யாருடன் தொடர்பு இருப்பது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
    உண்மையில் இவர்கள் தமிழ்மக்களில் இலங்கை என்ற தேசத்தில் அக்கறை கொண்ட இந்த பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்தை இந்த கட்டுரை மூலமாக ஜெயபாலன் எழுப்பியிருக்கிறார். நிதானமாக சிந்தித்து தமது கருத்துகளை வழங்கவேண்டியது கடமை. இலங்கை என்ற தேசம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே! ஈழத்தமிழினமும் பாதுகாக்கப்பட முடியும்.
    புலிகளின் பட்டுக் குஞ்சங்கள் புலத்தில் தொங்கி நின்று இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

    Reply
  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    Visuvan and Sivakumaran I’m sorry you are wrong. You know why, this solicitor K.P. Nathan is not genuine. He was the leader for solicitors’ fasting campaign against Sri Lankan govermnment in May 2009 infornt of the British parliament. He wanted to prosecdute Rajapaksa brothers for war crime and not the LTTE.

    He did not care the innocent Tamils who were killed by the LTTE and when they had been in the camp he did not organise any protest aganist it. He visited India during the trrible fight to get more support from Tamil Nadu’s jokers. So his Sri Lanka journey can be for his personal gains rather than defending interest of the suffring Tamils.

    If the government had known that he was a key figure in inviting Bruce Feine or his hunger strike in May 2009 Basil Rajpaksa would have ordered for his arrest.

    He was likey last time. But who knows it will not happen next time. If Thesamnet has courage go to him and take an interview then we can easlily indentifiy him and his motive. It seems he is very good in turing his cap. An opprotunist.

    Reply
  • palli
    palli

    இவர்கள் திரும்பி வந்ததும் சிலர் மாற்றுகருத்தாளர் என பினாமிகளால் வர்னிக்கபடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஆனாலும் ஒரு
    புலி ஆதரவாளர் கருனாவரை இறங்கி சந்தித்து இருப்பது பாராட்டுதான், ஆனால் இனியாவது புளி வியாபாரத்தை விட்டு தமிழர் சார்பான குழு என புறப்படுங்கள், உங்களுக்கு என்னும் சில வரவேற்ப்புகள் கதவுகளை துறக்கும்; உங்கள் கருத்தை சொல்ல புலி என்னும் அடைமொழி எதுக்கப்பா?

    Reply
  • BC
    BC

    //chandran.raja- உண்மையில் இவர்கள் தமிழ்மக்களில் இலங்கை என்ற தேசத்தில் அக்கறை கொண்ட இந்த பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்தை இந்த கட்டுரை மூலமாக ஜெயபாலன் எழுப்பியிருக்கிறார். நிதானமாக சிந்தித்து தமது கருத்துகளை வழங்கவேண்டியது கடமை.//

    நன்றி சந்திரன், இதுவரை இலங்கை தமிழர்கள் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் + குழுக்கள் இப்படி கூறியவுடன் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். உண்மையை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.

    Reply
  • london boy
    london boy

    /ஆனால் இனியாவது புளி வியாபாரத்தை விட்டு தமிழர் சார்பான குழு என புறப்படுங்கள்//
    ஜயோ பல்லி அவங்கள் புளி வியாபாரத்துக்குத்தான் போறாங்கள். அதை இங்கிலிசில் இன்வெஸ்மென்ட் என்கிறாங்கள். சனங்கள் நலங்கள் என்று வளையாத புள்ளிகள் இப்ப ஏன் யூ ரேண் எடுக்கிறாங்கள் என அலசிப்பாருங்கள். புலி புலியாய்த்தான் நிக்குது. நிக்கிற இடம்தான் வேறை. பணம்தான் குறி.

    Reply
  • jalpani
    jalpani

    இவர்கள் புலியோடு இருந்திருந்தால் எதை செய்திருப்பார்களோ அதைத்தான் இப்போதும் செய்யப் போகின்றார்கள். தற்செயலாக அதிஸ்டக் காற்று தலைவர் பக்கம் அடித்திருந்தால் இன்றைக்கு மதிவதனியும் சத்தியதேவியும் ரமில் ஈலத்தின் First Ladies களாக இருந்திருப்பார்கள். அதேபோல் இப்ப போய்வந்தவகர்ளும் தமக்குரிய இடங்களை அடைந்திருப்பார்கள். தமிழ் மக்களின் இரத்ததில் தங்கள் அலுவல்களைப் பார்த்தவர்கள் அவர்களின் வியர்வைகளை உறிஞ்சாமல் விடுவார்களா? அதுதான் அரசிடம் போயிருக்கிறார்கள்.

    Reply
  • kovai
    kovai

    புலிக்கை சேர்ந்தாங்கள், அள்ளினாங்கள். இப்ப அரசோட சேர்ந்து அள்ளப் போறாங்கள். எவர் சனத்தைப் பற்றி யோசிக்கிறது.

    Reply
  • kris
    kris

    தமிழர்க்கு தலைகுனிவு பிரபாகரனே. ஒரு முட்டாளிடம் தமிழினம் தனது உயிர்ப்பிச்சை கேட்டு பயந்தே தனது சமூகத்தை சீரழித்தது
    இந்த சீரழிவு பிரபாகரனால் வரும் என்பதை தெரிந்தும் எல்லோரும் பிரபாகரனை விட்டுவைத்ததே தவறு இன்று மகிந்தா வந்திருக்காவிட்டால் புலி இன்றும் கொலைகளையே ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கும்.

    Reply
  • East news
    East news

    இப்ப என்னதான் புதிதாய் நடந்ததென்று அங்கலாய்க்கிறியள். தேசியத்தலைவர் பாதையில் இப்போது தமிழர்கள் போகிறார்கள். அவரும் ஆயுதத்தை மெளனிக்கிறேன் என்று சொல்லிப் போட்டு அரசிடம் போனவர். தலைவரைத் தொடர்ந்து இப்ப மற்றவர்களும் அதே பாதையைத் தொடர்கிறார்கள். நேற்று போஸ் போன்றோர், இன்று ரில்கோ திலகர் போன்றோர், நாளை ரில்கோ ரகு போன்றோர்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நேற்று வெள்ளிக்கிழமை 13ம் திகதி கார்த்திகை மாதம் 2009 தமிழர் தகவல் நடுவத்தினால் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடாத்தப்படும் கூட்டத்தொடர் ஈஸ்ட்காம் சைவமுன்றேற்றச் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தொடர் லண்டனில் பல பகுதிகளிலும் மாறிமாறி நடாத்தப்படுவது வழமையானது இந்த கூட்டத்தை சந்திர போஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

    கூட்டம் ஆரம்பமாகும்போதே கூட்ட மண்டபத்திற்கான செலவுகள் பற்றிக் கதைக்கப்பட்டு கூட்டம் ஆரம்பமானது. இப்படியாக பல கூட்டங்கள் லண்டனில் கோவில்களிலும் வேறு இடங்களிலும் நடைபெறுகின்றது. கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற போராட்டத்திற்கென, கோடிககணக்காக அள்ளிக்கொடுத்த மக்களின் பணத்தில், மக்கள் யாரும் தமிழர்கள் என்றால் ஒன்றுகூட பொது இடம் என்று ஒன்று இன்றுவரை இல்லை. இன்றும் மக்களால் கொடுக்கப்பட்ட பலகோடி பெறுமதியான பணங்களும் சொத்துக்களும் தனியார்களினால் சுத்துமாத்து செய்யப்பட்டு பதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் தமது கருத்துக்களை முன்வைக்க அழைக்கப்பட்டடிருந்தவர்களில் ஈஸ்ட்காம் சேர்ச்சை சார்ந்தவர்களும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பத்மநாதனுமாகும்.

    சேர்ச்சை சார்ந்தவர்கள் தமது சிலமாதங்களுக்கு முன்பு போய்வந்த கருத்துக்களையே முன்வைத்திருந்தனர் அவர்களால் செய்யப்பட்ட உதவிகளை வரவேற்ற போதும் அவர்கள் கூறிய அரசு எதிர்ப்பு கருத்துக்களில் பலவற்றில் இன்று மாற்றம் கண்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது அதைவிட இந்த அவதானிப்புக்களில் இவர்களால் கூறப்பட்டவைகள் ஏற்கனவே தேசம்நெற்றில் வெளியிடப்பட்ட பல கருத்துக்களும் செய்திகளும் தகவல்களுமாகவே எனக்குப்பட்டது. அதைவிட நேற்று அவர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களை முன்வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்கவே முடியாது. இதைவிட சேர்ச் பெண்மணி இந்த மக்களிடம் தாம் கிறீஸ்தவர்கள் உங்களுக்காக பிராத்திக்கிறோம் என்றும் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறிமுடித்தார்.

    இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போது நான் நீங்கள் கூறிய கருத்துக்களில் நிறையவே மாற்றம் வந்துள்ளது பற்றியும், அமைச்சர் டக்ளஸினால் செய்யப்பட உதவிகளும் பராமரிப்புக்களும் பற்றியும் கூற முற்பட்டபோது கூட்டத்திலிருந்த Joey என்பவர் சீறிப்பாய்ந்து நீங்கள் அந்த சேர்ச்காரர்களின் கருத்துக்களை மறுதலிக்கிறீர்கள் என்றும் அரச ஆதரவு கருத்ததாக இருக்கிறது என்றும் கொஞசம் உரத்தே பேசினார். பின்பு நான் எனது கருத்துக்களை முழுவதுமாக முன்வைக்க முடியவில்லை. இந்த joey என்பவர் பிரிஎப் உறுப்பினர் என்றும் இவர்கள் அரசுக்கு எதிரான கருத்துககளை மட்டுமே யாரும் வெளிட முடியும் என்ற நிலைப்பாடுகளை கொண்டவராகவும் மற்றவர்களின் கருத்துக்களை சொல்ல வரமுன்பே மற்றவர்களின் வாய்மூடும் திட்டம் கொண்டவர்கள் என்பதும் எனக்கு பின்பு கூட்டதில் இருந்தவர்கள் கூறினர். இந்த joey என்பவரை நான் முதன் முதலில் சந்தித்துள்ளேன். ஏற்கனவே இப்படியாக ஒரு கூட்டத்தில் ராகவனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு யார் இவர்? இவரை யார் கூட்டத்திற்கு வரவிட்டது? என கருத்து முன்வைத்தவர்களில் இவரும் TRTEC Paul என்பவரும் என கூட்டதில் இருந்தவர்களால் எனக்கு கூறப்பட்டது.

    joey பேசும்போது, விதாரண ஒரு கூட்டத்தில் முகாமில் உள்ளவர்களுக்கு பல பொருட்கள் கொடுக்கப்படுகிறது என்று கூறினார் என்று சொல்ல TILKO Ragu (ரகு) உடனடியாக நீர் அதை றெக்கோட் பண்ணியிருக்க வேண்டும் என்றார்.

    அப்போது நான் அது உண்மை முகாமில் பல பொருட்கள் அரசினால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல, TILKO Ragu (ரகு) இல்லை அது வணங்கா மண் பொருட்களாம் என்றார். வணங்காமண் பொருட்கள் கொடுத்தது எப்ப? சனங்கள் முகாமுக்குள் கொண்டு வரப்பட்டது எப்ப?. இவர்களுக்கு ஒன்று இதுவரை புரியவில்லை வணங்கா மண் என்ற பெயர் காரணமாகவே இந்த கப்பலை இலங்கை அரசு தடத்து நிறுத்தி வணங்கவைத்து பின்னர் துறைமுகத்தில் பொருட்களை பழுதடைய விட்டதும் பின்னர் பல பொருட்களை குப்பைத் தொட்டியில் இட்டது. வணங்கா மண்ணை தமிழர்களின் உதவி என்ற பெயர் வைத்திருந்தால் அரசு அதை மக்களிடம் எப்பவோ சேர்த்திருக்கும் என்பதை இன்னும், இன்று வரை விளங்கவில்லை மக்களுக்கு உதவி செய்வதாயின் உதவி போய்சேரக்கூடிய வகையில் சிந்திப்தற்கு இவர்களுக்கு மண்டை திறக்கப்படவில்லை. இவர்கள் மக்களுக்காக சிந்திக்கவில்லை என்பதே இதன்கருத்து. இவர்கள் புலிகளுக்கு நாமும் ஏதே செய்கிறோம் என்று காட்டினால்தான் வசூல்நடக்கும் என்பதே இவர்களின் நோக்கமாகும். அரசுக்கு எதிராக செயற்பட துடிக்கும் TILKO Ragu ரகுவின் அண்ணா, TILKO திலகர் கொழும்பில் அரசுடன் அடுத்த இன்வெஸ்ட்மென்ட் பற்றி கலந்தரையாடுகிறார் என்பதை கவனிக்க!

    இந்த கூட்டத்தில் என்னால் அறிந்து கொண்டது திரும்ப திரும்ப இந்த புலிவால்களும் புலிகளின் பெயரில் பணத்தை திருடியவர்களும் இந்த பம்மாத்து அரசியலை விடவும் மாட்டார்கள். மற்றவர்கள் கருத்துச் சொல்ல அல்லது வேறுபட்ட கருத்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை சொல்லவும் விடமாட்டார்கள் இவர்களை திருத்தமுடியாது. ஈழத்தில் அடம்பிடித்த விடயம் ஒன்று முள்ளிவாய்காலில் முடிந்தது. வெளிநாட்டு அடங்கள் எங்கு போய் முடியப்போகுதோ?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    பத்மநாதன் தனது பேச்சின்போது உண்மைநிலைகளை எடுத்துக் கூறியும் தாம் இன்று அரசை நம்புவதாக அல்லது அரசின் உதவியுடன் எமது மக்களுக்கான சேவைகளை செய்ய முடியும். செய்வதற்கு அரசும் இடம் அளிக்கிறது என்பதை முன்வைக்கும்போது நான் இந்த joey, tilko ரகு TR TEC போல் போன்றவர்களின் முகத்தையே பார்த்தேன் இவர்களுக்கு முகம் தொய்ந்துவிட்டது. காரணம் இந்த பத்மநாதனும் ஏதாவது அரசுக்கு எதிராக தலைவர் வழி என்று பேசமாட்டாரா? இவரும் எங்களுடன் புலிப்பாட்டு பாடியவராச்சே. இப்ப என்ன தலைவர் போனதும் எல்லாம் மகிந்தா பாட்டு டக்ளஸ் பாட்டு பாடுகிறார்கள் என்றும் இவர்களுக்கு துரோகிப்பட்டம் மனதுக்குள்ளே வழங்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

    பத்மநாதன் கடந்தகாலங்களில் நடந்த தவறுகளை உணர்ந்து கொள்கிறார் என்றே எனக்கு அர்த்தம் தெரிகிறது. அதைவிட அவரும் இனிமேல் ஒரு புதிய வழிவகையை கண்டு கொள்வதன் மூலமே தமிழ்மக்களுக்கு உதவ முடியும் என்பதை விளங்கிக் கொள்கிறார் அவர்விளங்கிய வழி என்பதை டக்ளஸ தேவானந்தா கடந்த பல வருடங்களாக சொல்லியும், நடைமுறையில் செய்து காட்டியதுமான வழி. அது அரசுடன், மக்களுக்காக கூட்டு சேர்வதே என்பதே என்ற அவரது பேச்சிலிருந்து எனக்கு தென்பட்டது.

    பத்மநாதன் போன்றோர்களின் செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவளிக்கப்பட வேண்டியதுமாகும் பத்மநாதன் சிறுவர்களுக்கான உதவித்திட்டங்களை பொறுப்பேற்று செய்ய திட்டமிடுகிறார் இவற்றால் எமது குழந்தைகள் நன்மைபெறுவர்.

    அதே போன்று இந்தக் கூட்டத்தில் வருகை தந்திருந்த வேறு இரு இளைஞர்கள் அரசியலை இங்கே பேசாமல் மக்களுக்கான உதவிகளைப்பற்றி மட்டுமே பேசுவோம் செயற்ப்படுவோம் என்றனர் அவர்கள் தம்மை எந்த அமைப்பும் சாராதவர்கள் என்று தெரியப்படுத்தினர்.

    பொதுவாக இந்த கூட்டத்தில் எழுந்த கருத்து; உதவி செய்யும் நிறுவனங்களின் உதவியினாலும் வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் அல்லது இனிமேல் செய்யக் கூடிய உதவிகளினாலும் மக்கள் காப்பாற்றப்பட முடியும் என்ற தொனி எழும்பியபோது கூட்டத்தில் இருந்தவர்கள் ஏதோ நாங்கள் அந்த மக்களை காப்பாற்றியுள்தாக ஒரு தொனி தெரிந்ததது.

    நான் எனது கருத்தை முன்வைக்கையில்; முள்ளிவாய்கால் காலத்திற்கு பிறகு இன்று வரை எத்தனை சமூக சேவை நிறுவனங்களால் இந்த 3 லட்சம் மக்களாலும் காப்பாற்றப்பட்டிருக்க முடியும், இலங்கை அரசும் அரசின் உதவிகளுமே இந்த மக்களுக்கான உணவு மற்றும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததை மறந்து பேசக் கூடாது என்றபோது அமைதியாகவே இருந்து அதிலிருந்த உண்மையை ஏற்றுக்கொண்டனர்.

    புலம்பெயர்ந்தோர் செய்த உதவி அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத உதவி என்பதையும் அரச உதவிகளே இந்த மக்களுக்கான உதவிகளை வழங்கியுள்ளது என்பதையும் இனிமேல் அரச எதிர்ப்பு கோசங்களை மட்டும் முன்வைத்து வைத்து புலம்பெயர் மக்கள் அரசியலோ அல்லது மக்களுக்கான உதவிகளை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் கருணா முதலமைச்சர் பிள்ளையான் உட்பட மற்றும் சுதந்திரக்கட்சி மற்றும் புலம்பெயர் மக்களின் அமைப்புக்கள் என்பன ஒருங்கிணைத்தே ஒரு மெக்கானிஸம் உருவாக்கபட வேண்டும் என்ற கருத்தும் என்னால் முன்வைக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் பலர் பல கருத்துக்களையும் முன்வைத்தனர்.

    முகாம்களில் இருந்து வெளியேறிய மக்கள் சாவகச்சேரியில் பயப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசு எல்லாரையும் சுட்டுத்தள்ளும் எண்டு பயப்பிடுமளவுக்கு அரசு நிலைமைகளை வைத்திருக்கிறதையும் மக்கள் தாமாக கூட்டுச்சேர்ந்து இயங்க முடியாமல் உள்ளதையும் குறித்துக்காட்ட பிரிஎப் பலிகளின் ஆதரவுக்காரர் அதை மட்டும் ஆதரித்து தலையை ஆட்டுவார்கள். இதில் உள்ள விடயம் என்னவென்றால் இவர்களின் மண்டை ஒரு பக்கம்தான் யோசிக்கிறது. கருத்துக்கும் ஜனநாயகத்தில மற்றப்பக்கம் என்று ஒன்று உண்டு என்பது இவர்களுக்கு விளங்குவது இல்லை. இது உண்மையிலேயே ஒரு அறிவார்த்தப் பிரச்சினை. ஒரு கலாச்சாரப் பிரச்சினையாகவும் உள்ளதையும் பாக்க வேண்டியுள்ளது. மக்கள் கூட்டம் முரண்பட்ட கருத்துக்கொண்டவர்களை உள்ளடக்கியது. இவர்கள் சில விடயங்களில் கருத்து ஒன்றுபட்டும் சில விடயங்களிலோ அல்லது பல விடயங்களிலோ கருத்து முரண்பட்டும் ஒன்றாக செயற்படலாம் என்ற பக்குவம் அல்லது முன்னேறிய மனிதர்களின் கலாச்சாரத்தை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சத்தியதேவியை பற்றி எங்கோ கேள்விப் பட்டமாதிரி இருக்கிறது ஞாபகம் தான் வருகிறது இல்லை. தயவு செய்து அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்கள் யாழ்ப்பாணி.

    Reply
  • jalpani
    jalpani

    சூசையின் மனைவி சத்தியதேவி, சூசை “உழைத்துக்” கொடுத்த லட்சங்களோடும், கிலோ கணக்கில் தங்கத்தோடும் இராணுவத்திடம் பிடிபட்டாவே -ஞாபகம் வருமே!

    Reply
  • விசுவன்
    விசுவன்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள் இளைஞர்களும் யுவதிகளும் சொல்லொணாத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சிறில்ஙகா கார்டியன் தனது வவுனியா நிருபரை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் போராளிகளின் நிலமை மிக மோசமானது என்றும் தினமும் மாலை வேளைகளில் பெண் போராளிகளில் சிலர் அழைத்துச் செல்லப்பட்டு காலையில் கொண்டு வந்து விடப்படுவதாகவும் இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களில் சிலர் மீளவும் வருவதில்லை என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எவருக்கும் தெரியாது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவங்களை விபரித்த குறித்த போராளி தான் தற்கொலைக்குச் சில தடவைகள் முயற்சித்த போதிலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ வீரரே இந்த தகவல்களை தெரிவித்ததாக இந்த செய்தி கூறுகிறது.

    http://www.srilankaguardian.org/2009/11/disgraceful-treatment-of-ltte-captives.html

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மாவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவியை கடத்திக்கொண்டு போய் தலைவருக்கு தாரைவார்த்து கொடுத்ததின் மூலம் பிரபலியமான “மதிவதனி”யைத் தான் ஞாபகம் இருக்கிறது. சத்தியதேவி ஒருநாள் வந்த செய்திதானே! நினைவில் வைக்க முடியவில்லை. தகவலுக்கு நன்றி யாழ்ப்பாணி.

    Reply
  • Kusumpo
    Kusumpo

    இதை விடத் தமிழர்களுக்கு தற்போதைக்கு என்ன வேண்டுமாம்? இது இப்படி இருக்க நோர்வேயில் தமிழீழம் கேட்டு தேர்தல் நடக்கிறது. காலாவதியான கண்ணிறாவியை ஏனப்பா தூக்கிக் கொண்டுதிரிகிறீர்கள். உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக்கண்ணன் என்ற கணக்கு அங்கே கிடைக்கவிருக்கும் சலுகைகளைக் கூட எம்மக்களுக்குக் கிடைக்காமல் பண்ணப்போறாங்கடா.. புலன்பெயர்நது புண்ணாக்குகள்

    Reply
  • TNA
    TNA

    TNA (TELO,TULF,EPRLF and ACTC)satisfied with pace of resettlement: Sri Kantha

    After visiting the IDP camps for the first time since they were set up after the end of the war the Tamil National Alliance (TNA), said yesterday government appeared to be serious about the resettlement of these displaced persons.

    TNA members said there was a sense of commitment by the military and civil officials in this respect.A seven–member team of TNA members visited the IDP camps and the newly resettled areas yesterday. The visit was organised by Government.TELO MP for the Jaffna district N. Sri Kantha told the Daily Mirror basic facilities had been provided to displaced persons housed in welfare camps and villages in Chettikulam, Vavuniya.

    The MP added the people however yearned to return to their original homes.He said the people raised their grievances and the TNA promised to take them up with Government and relevant authorities. The MP said there was a need for a regulated system to issue passes to IDPs to enable them to visit relatives in other camps.The TNA identified cases where the LTTE suspects and persons who surrendered were separated from their families and kept in reservation camps.

    Mr. Sri Kantha said his team brought these issues to the notice of the officials concerned, who responded positively. The IDPs pointed out the need for financial assistance to purchase requirements, apart from dry rations provided by Government. “Basic facilities have been provided and people have understood the situation. They are bravely facing it. We must appreciate the role played by Government and military officers in attending to the needs of the IDPs.

    We have to approach the whole problem in a positive manner” he said.The MPs also visited resettled areas of Mannar and Thunukkai and interacted with the people. Mr. Sri Kantha said the resettled people were relieved to have eventually returned to their homes.“We are satisfied with the pace at which the resettlement process has been progressing. In fact this visit was very useful,” he said.

    The TNA MPs also visited areas where de-mining was taking place and observed progress of the task. The TNA delegation comprised TELO Jaffna MP N. Sri Kantha, P. Ariyanethran, Sivanathan Kishor, TELO Vannei MP Vino Noharathalingam, TELO President and Vannei MP Selvan Adaikkalanathan, R.M. Imam and Thomas William Thangathurai.

    Reply