கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையில் நால்வர் கைது !
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை கடற்கரையில் 2 படகுகளை காங்கேசன்துறை வடக்கு கடற்படை தள அதிகாரிகள் சோதனையிட்ட போது, 8 கேரள கஞ்சா பொதிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22, 39 மற்றும் 49 வயதுடையவர்களாவார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை சோதனையிட்டபோது, 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 147 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.