விலை குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் !

விலை குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் !

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும். அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *