இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகிறார்
முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க மீதான இலஞ்ச ஊழல் புகார் குறித்த விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார். வருகிற திங்கட்கிழமை 28 ஏப்பிரல் ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்னிலையாவதாக தனது சட்டத்தரணி மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
சாமர சம்பத் தனது பதவிக்காலத்தில் மாகாணசபையின் வங்கிக் கையிருப்பில் இருந்து பணத்தைப் பெற்றுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வாங்க என பெற்ற நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்கு செலவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாமர சம்பத் தற்போது கைதாகி விளக்கமறியலில் உள்ளார்.