அகிலன் முத்துக்குமாரசுவாமி எம். ஏ. சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்பு
கனடாவையும் தாயகத்தையும் தளமாகக் கொண்டு வெளிவரும் புதிய சுதந்திரன் என்ற இலத்திரனியல் நாளிதழின் ஆசிரியரான அகிலன் முத்துக்குமாரசுவாமி இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு வழக்கு தொடர்பானவொரு செய்தியை அவதூறாக பிரசுரித்திரிந்தது. அச்செய்திக்கு எதிரான திருகோணமலை நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று நடந்து வந்தது.
அந்த வழக்கிலேயே இருதரப்பையும் சமாதனமாக போகும்படி நீதிபதி கேட்டுக் கொண்டார். அதன்படி அகிலன் முத்துக்குமாரசுவாமி நீதிமன்றில் எம்.ஏ. சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். மேலும் இந்த பகிரங்க மன்னிப்பு தொடர்பில் அகிலன் முத்துக்குமாரசுவாமி தனது ‘ புதிய சுதந்திரன்’ பத்திரிகையில் ஒரு வாரத்திற்குள் செய்தி வெளியிட வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். சுமந்திரனும் அகிலனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.