சூப்பார் கூட்டு: எதிரியின் எதிரி எனக்கு நண்பன்: Bar விக்கி வீட்டோடு சுப்ரா மோசடி சரவணபவன் சைக்கிளோடு கூட்டு !
யாழ் ரணில் விக்கிரமசிங்க – காமினி திஸ்ஸநாயக்க கோஸ்டி 1981 இல் யாழ் நூலகத்ததை எரிப்பதற்கு சரவணபவனின் தந்தை வீட்டில் தங்கியிருந்தே அக்காரியத்தைச் செய்தனர். அன்றைக்கு சரவணபவனின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர். அதன் பின் சுப்பிரா பினான்ஸ் நிறுவனத்தை நடாத்தி ஏழை மக்களின் நிதி வைப்பீட்டைக் கொள்ளையடித்து மக்களைக் கண்ணீரில் தவிக்க விட்டனர். பிறகு மாம்பழம் கொண்டு சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இப்போது பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்கப் போவதாக வீறுகொண்டு புறப்பட்டுள்ளார்.
தமிழரசு எம் ஏ சுமந்திரன் சரவணபவனுக்கு சீற்கொடுக்காததால் தமிழரசின் சுமந்திரனின் எதிரியான கஜாவோடு சரவணபவன் கோஸ்டி இணைந்தது. எதிரியின் எதிரி தனக்கு நண்பன் என்ற வகையில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் உதயனின் ஆசிரியர் ஈஸ்வரபாதம் சரவணபவனை கட்சிக்குள் உள்வாங்கினார். இங்கு கொள்கையும் கிடையாது போட்பாடும் கிடையாது.
இதே அடிப்படையில், உள்ளூராட்சித் தேர்தலில் மான் சின்ன தமிழ் மக்கள் கூட்டணி தாம் போட்டியிடாத தொகுதிகளில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க ஆலோசித்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் மாநகரசபை மேயர் கனவு நனவாக முடியாத நிலையில் வி மணிவண்ணன் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பில பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரனுடன் கலந்துரையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மணிவண்ணன் – பார்த்தீபன் கோஸ்டி கஜேந்திரகுமாரோடு காலம் தள்ள முடியாது, தங்களை ஓரம் கட்டுகின்றார்கள் என்ற அடிப்படையில் கட்சியிலிருந்து பிரிந்தனர்.
இங்கும் கொள்கை கோட்பாடு கிடையாது. எதிரியின் எதிரி நண்பண் என்ற அடிப்படையில் தன்னுடைய எதிரி கஜேந்திரகுமார். கஜேந்திரனின் எதிரி சுமந்திரன், என்பதால் மணிவண்ணன் தமிழரசின் சுமந்திரனுக்கு மணி அடிக்கிறார். ஆனால் சுமந்திரன் பார் விக்கியின் எதிரியாகவும் இருப்பதால் கொஞ்சம் சுணக்கம்.
தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறுவதை தடுக்க தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் முத்தரப்பு, பலதரப்பு மற்றும் தனித்தரப்பு கூட்டுக்கள் என பெரிய அரசியல் சதுரங்கமே ஆடுகின்றன.
எவ்வாறாயினும் முன்னாள் நீதியரசர் பார் புகழ் விக்கினேஸ்வரனை மணிவண்ணன் குழுவினர் தமிழரசுக் கட்சியை ஆதரிக்கும் விடயத்தில் தாஜா பண்ண பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தமிழர் உரிமை தமிழ் தேசியம் என்பதெல்லாம் தங்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு கொடுக்கின்ற பெயர்கள். தமிழ் மக்கள் தொடர்ந்தும் கீழ்நிலையில் இருக்க வேண்டும் அவர்களை வைத்து தங்கள் அரசியல் வியாபாரத்தை வளர்த்தெடுத்து நல்ல கார்களும் காணிகளையும் வாங்கி தங்கள் பரம்பரையை வளர்க்க வேண்டும். கள்ளக் காணி உறுதிகளை திறப்படச் செய்யும் இந்தச் சட்டத்தரணிகள் கும்பலுக்கு உள்ளுராட்சி வேட்புமனுக்களை ஏன் ஒழுங்காகப் பூர்த்தி செய்து கொடுக்க முடியவில்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல் பின்னர் தங்களுடை ஜனநாயகத்தை மறுப்பதாக ஒரு புலம்பல் வேறு.