வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றும் 138 அதிபர்களை மே மாதம்  20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு வடமேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள அதிபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தைத் தவிர்ந்து வேறு எந்த காரணத்திற்காகவும் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட மாட்டாது என வடமேல் மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *