இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் !
அமெரிக்க துணை அதிபரான ஜே. டி. வான்ஸ், இந்தியாவிற்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷாவுடனும் பிள்ளைகளுடனும் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிவர்களை மத்திய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்திய போதும் தற்போது வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே அமெரிக்க துணை அதிபரின் பயணம் அமைந்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் வேளையில் இருதரப்பினரும் வர்த்தகம், வரி, வட்டார பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய விவரங்களை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடாத்தவுள்ளனர்.
இந்திய பிரதமருடனான சந்திப்பின் பிறகு, ஜெய்ப்பூர் செல்லவுள்ளார் எனவும், பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு செல்ல உள்ளார் எனவும் 24 ஆம் தேதி அமெரிக்க புறப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.