பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் நிவாரணம்
வங்குரோத்தடைந்துள்ள இலங்கை நிலநடுக்கத்தால் பாரிய அழிவைச் சந்தித்துள்ள மியான்மார் நாட்டுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் இலங்கைக்கான மியன்மார் தூதுவரிடம் கையளித்தார். இலங்கை எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநயக்க மியான்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தமைக்கு மியன்மார் தூதுவர் நன்றி தெரிவித்தார். அத்துடன் நெருக்கடியான நேரத்தில் இலங்கை தன்னுடைய சுகாதார மற்றும் நிவாரண பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்கும் தூதுவர் நன்றி தெரிவித்தார்.