ஜேர்மனியில் இனவாதத் தாக்குதல் அச்சுறுத்தலால் பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஜேர்மனியில் இனவாதத் தாக்குதல் அச்சுறுத்தலால் பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஜேர்மனியில் டியுஸ்பேர்க் நகரில் கடந்த வாரத்தில் பாடசாலை ஒன்றுக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று ஈமெயிலில் வந்துள்ளது. அக்கடிதத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரானதும் தீவிர வலதுசாரி நாஸிக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப் போவதகவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாரத் தொடக்கம் திங்கட்கிழமை, 20 பாடசாலைகள் மூடப்பட்டு விடுமுறைகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஒன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. மீண்டும் நேற்றைய தினம் ஒரு பாடசாலைக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்கு பல தடவைகள் அச்சுறுத்தல் ஈமெயில் பல்வேறு பாடசாலைகளுக்கும் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தப் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

டியுஸ்பேர்க் நகரத்தைப் பொறுத்தவரை ஜேர்மனியின் நோட் ரைன் வெஸ்பாலன் மாநிலத்தின் 5 வது பெரிய நகரம். துருக்கியர், அராபியர் என வெளிநாட்டவர்கள் செறிவாக மற்றும் கூடுதலாக வாழும் நகரம். குடியேறிகளின் ஆதிக்க கூடிய நகரம்.

அந்த வகையில் டியுஸ்பேர்க் நகரப் பாடசாலைகளில் வெளிநாட்டு பின்னணியை கொண்ட மாணவர்களே பெருமளவில் கற்கிறார்கள். இதுவொரு “ இனச்சுத்திகரிப்பு” அச்சுறுத்தலாக இடப்பெயர்வை வரலாற்றை பின்னணியாக கொண்ட மாணவர்களை அச்சமடைய வைத்துள்ளதாக அந்நகரப் பாடசாலை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். மேற்கு ஐரோப்பா உட்பட அமெரிக்க நாடுகளில் வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள், குற்றங்கள் மற்றும் வன்முறைகள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *