பாடசாலை அதிபர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் மூலமாகவே நியமிக்கப்படுவார்கள் பிரதமர் ஹருணி

 

பாடசாலை அதிபர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் மூலமாகவே நியமிக்கப்படுவார்கள் பிரதமர் ஹருணி

பாடசாலை அதிபர்கள் ஒரே நடைமுறையின் கீழ் நேர்முகப் பரீட்சைகள் ஊடாக மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் ஹருணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் தேசியப் பாடசாலைகள் அனைத்திலும் நேர்முகப் பரீட்சைகளுடாக மட்டுமே அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர் பாடசாலைக்கு பாடசாலை விதிமுறைகள் மாறாது எனத் தெரிவித்தார். அதிபர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட ஆறுதிருமுருகன் அதிபருக்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையில் அதிபராக்கப்பட்டார். அவருடைய காலத்தில் கல்லூரி வீழ்ச்சியடைந்தது. பெற்றோரின் கடுமையான எதிர்ப்பால் அவர் ஓய்வுபெற்றுக்கொண்டார். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்து தற்போது அதிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹருனியின் முடிவு இறுக்கமாக அமுல்படுத்தப்பட்டால் பாடசாலைகளைச் சுற்றி உருவாகும் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

‘வடக்கு கிழக்கில் சீனா காலூன்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் !’ ரெலோ செல்வம் – ‘அப்படி என்றால் ஏன் மன்னாரில் அத்தானிக்கு குரல்கொடுக்கவில்லை’ ஈழநாடு

சீனாவின் அடி வருடிகள் இந்திய ஒப்பந்தங்களை குழப்ப நினைத்தால் அதனை எதிர்த்து நிற்போம். வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஏப்ரல் 9 புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கேள்வி எழுப்பிய யாழ் ஈழநாடு பத்திரிகை அப்படி என்றால் ஏன் மன்னாரில் அத்தானிக்கு ரெலோ செல்வம் அடைக்கலநாதன் குரல்கொடுக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்ரல் 10 இல் அவர்களுடைய ஆசிரியர் தலைப்பில் பா உ செலவத்தின் தேர்தல் தொகுதியான மன்னாரில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அனுமதியளிக்கப்பட்ட அத்தானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் கைவிடப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இது சுற்றாடலுக்கு ஆபத்தானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தது. அதனடிப்படையில் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஈழநாடு தனது ஆசிரியர் தலைப்பில் ரெலோவையும் ஏனைய தமிழ் தலைமைகளையும் அதன் வங்குரோத்து அரசியல் நிலையையும் தோலுரித்துள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *