வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை – USAID நிதி முடக்கம்: நெருக்கடியில் அரச சார்பற்ற அமைப்புகள்

யு.எஸ்.எய்ட் (United States Agency for International Development) வழங்கும் நிதியை முடக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் அறிவிப்பால், இலங்கையின் சமூக மற்றும் மனித உரிமை சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யு.எஸ்.எய்ட் ஆதரவில் செயற்படும், மக்களாட்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் உரிமைகள், LGBTQ உரிமைகள் போன்ற சமூக நீதியை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் தற்போது இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல அமைப்புகள் பணியாளர்களை நீக்கி, திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய சூழ்நிலையை சந்திக்கவுள்ளன. அரசு சார்பற்ற நிறுவன செயலகத்தின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பெற்ற மொத்த நிதியில் கிட்டத்தட்ட அரைவாசி யு.எஸ்.எய்ட் வழங்கிவந்துள்ளது. இது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணாங்களிலும் பல்வேறு செயற்திட்டங்கள் கருத்தரங்குகள் யு.எஸ்.எய்ட்டின் உதவியால் இடம்பெற்றுவருகின்றன.

டொனால்ட் ரம்பின் “America First” கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடக்கம் கருதப்படுகிறது. ட்ரம்ப் சர்வதேச உதவிகளை வெகுவாகக் குறைத்து, அமெரிக்காவின் உள்நாட்டு செலவுகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றார்.

இதனிடையே, USAID நிறுவனத்திற்குள் எலோன் மஸ்கின் குழுவினருக்கு அணுகல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் USAIDஐ “குற்றவியல் அமைப்பு” என விமர்சித்து, “இதை அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்திருந்தார். இதையடுத்தே இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யு.எஸ்.எய்ட், 2023ஆம் ஆண்டு மட்டும் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 72 பில்லியன் டொலர் உதவி வழங்கியது. இந்த நிதி நிறுத்தம், இலங்கையில் இயங்கும் பல்வேறு சமூக அமைப்புகளை பொருளாதார ரீதியாக கடும் பாதிக்கக்கூடும். முன்னணி அமைப்புகள், மாற்று நிதி ஆதாரங்களை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன என தெரியவருகின்றது.

புதிய ஜனாதிபதி டொனால் ட்ரமின் மற்றுமொரு அநீதியான கொள்கையான குடிவரவாளர்களைத் திருப்பி அனுப்பும் நடைமுறையால் 3,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் திருப்பி அனுப்பப்படும் நிலை அங்கு தோண்றியுள்ளது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அரசானது தற்போது உலக ஒழுங்கில் பாரிய மாற்றங்களையும் தவறான முன்ணுதாரணங்களையும் ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் கேளீர் ஊடகத்திற்கு தேசம் ஜெயபாலன் வழங்கிய நேர்காணலில் டொனால் ட்ரம் பற்றி வருமாறு தெரிவிக்கின்றார்:

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *