மக்கள் எங்களுக்கு ஆறு மாதங்களை இல்லை ஐந்து ஆண்டுகளை தந்திருக்கிறார்கள் – ரில்வின் சில்வா
அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், இந்த வருடம் ஏப்ரலில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த ரில்வின் சில்வா, நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளதாகவும், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளனர், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம்.
மோசடி மற்றும் ஊழலை தடுக்க முயற்சிக்கும் போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை எதிர்க்கின்றனர். நாங்கள் வீதி விதிகளை அமுல்படுத்த முயற்சிக்கும்போது, விதிகளை கடைபிடிக்க தயங்குபவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றார்.