நெல் உற்பத்திக் குறைவுக்கு தொல்லியல் திணக்களமும் காரணம் – பா உ சண்முகம் குகதாசன் !
தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம்இ வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.